தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரத்தை பறிப்பதா? நாளை செவிலியர்கள் பெருந்திரள் போராட்டம்
19 Jul 2026, 9:59 pm
<p><strong>தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரத்தை பறிப்பதா? நாளை செவிலியர்கள் பெருந்திரள் போராட்டம்</strong></p><p>சென்னை, ஜூலை 19 - தொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரத்தை பறிக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து ஜூலை 21 அன்று சென்னை மருத்துவ இயக்க கம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் நே.சுபின் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் பணியாற்றும் 192 செவிலியர், அரசு மருத்துவமனைகளில் உள்ள 100 செவிலியர் என 292 பேரை மறு சீரமைப்பு என்ற பெயரில் அரசு மருத்து வமனை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் நடத்தப் பட்ட 7 நாள் தொடர் போராட்டத்தைய டுத்து, அப்போதைய அமைச்சர், ஆயி ரம் தொகுப்பூதிய செவிலியர் பணி யிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். புதிய திட்டங்கள் தொடங்கும் போது, நிரந்தர பணியிடங்களை உருவாக்கி எஞ்சிய 6,500 செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித் தார். தற்போது தொடங்கப்பட உள்ள 6 செவிலியர் கல்லூரிகளின் முதல்வர், டியூட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் தொகுப்பூதிய முறையில் உருவாக்கப் படுகிறது. மேலும், அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு 292 பணியிடங்களை உருவாக்காமல் மறுசீரமைப்பு என்ற பெயரில் இடமாற்றம் செய்கின்றனர். இதனால் தொகுப்பூதிய செவிலி யர்களின் பணி நிரந்தரம் பறிபோ கிறது. இதனை முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு செல்லும் வகை யிலும், மருத்துவ பயனாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்ற தவெக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றக் கோரியும் ஜூலை 21 (செவ்வாய்) அன்று தற்செயல் விடுப்பு - பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, மாநில பொரு ளாளர் ஹேமச்சந்திரன், துணைத் தலைவர்கள் அஸ்வினி கிரேஸ், சேசு டெல்குயின் ஆகியோர் உடனிருந்த னர்.</p>
