டிச.18 பேராவூரணியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில மாநாடு
3 Dec 2025, 2:59 pm
<p><strong>டிச.18 பேராவூரணியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாநில மாநாடு</strong></p>
<p>தஞ்சாவூர், டிச.3 - தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட 2 ஆவது மாநாடு, பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் எம்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.வேலுச் சாமி வேலை அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.சி.பழனிவேலு ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் விஜயமுருகன் சிறப்புரை யாற்றினார். நிர்வாகிகள் தேர்வு மாநாட்டில், மாவட்டத்தின் புதிய தலைவராக எம்.செல்வம், மாவட்டச் செயலாளராக ஆர்.எஸ்.வேலுச்சாமி, பொருளாளராக ஆர்.அரங்கசாமி ஆகி யோரை உள்ளடக்கிய 17 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தீர்மானம் வியாபாரிகள், விவசாயிகளிடம் லாபக்காய் எடுப்பதை தவிர்க்க அரசே கிலோ கணக்கில் தேங்காயை கொள் முதல் செய்ய வேண்டும். தமிழக அரசு நியாய விலைக் கடைகளில், பாமாயி லுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில், தென்னை சார்ந்த தொழில்களை ஒன்றிய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். பேராவூரணியில் கொப்பரை கொள் முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண் டும். தென்னை விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்துகளை மானிய விலை யில் வழங்க வேண்டும். தென்னைக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தென்னையை தாக்கும் வெள்ளை வாடல் நோய், காண்டாமிருக வண்டு தாக்குதல் உள்ளிட்ட நோய்களை கட்டுப் படுத்த மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். தென்னை விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை டிச.18 ஆம் தேதி பேராவூர ணியில் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மாநாட்டையொட்டி, நவீன் ஆனந்தனை தலைவராகவும், ஆர். எஸ்.வேலுச்சாமியை செயலாளராக வும், சி.ஆர்.சிதம்பரத்தை பொருளாள ராகவும் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை விவ சாயிகள் கலந்து கொண்டனர்.</p>
