தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

11 Apr 2026, 5:30 am
திருச்சி விரைவு செய்திகள்

குமரி மாவட்டம் வழியாக கனிமங்களை ஏற்றிச்செல்ல கனகர வாகனங்களுக்குத் தடை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

குமரி மாவட்டம் வழியாக கனிமங்களை ஏற்றிச்செல்ல கனகர வாகனங்களுக்குத் தடை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் நாகர்கோவில்,ஏப்.10- கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா மாநி லத்திற்கு கனிமங்களை ஏற்றிச்செல்ல கனகர வாகனங்க ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கடந்த 07.04.2026 அன்று தோவாளை வட்டம் திருப்பதிசாரம் பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சையின் போது ஒருவர் 09.04.2026 அன்று உயிரிழந்ததும் மற்றும் கடந்த 07.04.2026 அன்று கல்குளம் வட்டம் வில்லுக்குறி பகுதியில் விபத்தும் நடைபெற்றுள்ளது. மேலும் கடந்த 09.04.2026 அன்று இரவு 10 மணிக்கு நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு வாகனம் தக்கலை காவல் நிலையம் அருகில் எம்.ஜி.ஆர். சிலை முன்பாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டது.இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரில் ஒரு நபர் சரக்கு வாகனத்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்படி விபத்து தொடர்பாக தக்கலை காவல் நிலைய முதல் தகவல் அறிக்கை (எண்.164 / 2026 நாள்.09.04.2026) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட விபத்து சரக்கு வாகனத்தை இயக்கிய ஓட்டுநருடைய கவனக்குறைவால் ஏற்பட்டதாக தெரியவருகிறது. இவ்வாறு தொடர்ச்சியாக கனிமம் ஏற்றிச் செல்லும் அதிவேக வாகனங்களால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவது தொடர் நிகழ்வாக உள்ளது. நாகர்கோவில் – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அன்றாட சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்கும், கன்னியாகுமரி மாவட்டமானது சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளதால் இம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக அமைவதாலும், மாற்று வழி இல்லாததாலும் மார்த்தாண்டம் மேம்பாலப் பகுதி உட்பட நாகர்கோவில் – களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையை கனிமம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கடக்கும் போது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படு வதோடு, கனிம வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்திடும் பொருட்டும், விபத்தில்லா சாலை போக்குவரத்தை உறுதிபடுத்துவது என்பது மிகவும் அவசியம் ஆகிறது. மேலும் கனரக வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஓட்டுநர்கள் மூலம் வாகனங்களை அதிவேக மாக இயக்குவதால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்த லாக உள்ளது. பலமுறை உத்தரவுகள் வழங்கியும் அவர்கள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. எனவே பொதுமக்களின் நலன் மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுதல் ஆகியவற்றின் முக்கியத்து வம் கருதி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி (NH 47 from 43.000 km to 96.714km)“ வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி முடிவடைந்து செயல் பாட்டிற்கு வரும் வரை கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமங்களை கனரக வாகனங்களின் மூலம் ஏற்றிச் செல்ல தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

குமரியில் ரூ.12.50 லட்சம் பணம் பறிமுதல்

நாகர்கோவில்,ஏப்.10- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு படைகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்படும் பணியிலும் இப்படைகள்செயல்பட்டு வருகிறது. மேற்படி பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை குழுவி

னர்களால் ஏப்ரல் 9 முதல் 10 ஆம் தேதி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.12,50,100 பணத்தை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை ரூ.71,98,380 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் அறிமுக பயிற்சி

நாகர்கோவில்,ஏப்.10-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் தொடர்பான அறிமுக பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, குளச்சல் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் ராம்டின்லியானி ஆகியோரால் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 137 நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பயிற்சி முகாமில், வாக்குப்பதிவு நாளன்று நுண் பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.