முந்தய பக்கம்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு  முதல்வர் பெருமிதம்

24 Feb 2026, 3:55 pm
கல்வியில் சிறந்த தமிழ்நாடு  முதல்வர் பெருமிதம்
<p><strong>கல்வியில் சிறந்த தமிழ்நாடு &nbsp;முதல்வர் பெருமிதம்</strong></p> <p>சென்னை: தமிழ்நாடு மாதிரிப் பள்ளி கல்வியில் புதிய &nbsp;உயரங்களை எட்டியதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெறச் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரி வித்துள்ளார். 2021-22-இல் கல்வியில் பின்தங்கிய 10 மாவட்டங்களில் &nbsp;தொடங்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள் இன்று 38 மாவட்டங்களி லும், தலா ரூ.50 கோடியில் 800 மாணவர்களுக்கான உறைவிட, &nbsp;உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறப்பாகச் செயல்பட்டு வரு கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் அரசு மற்றும் மாதிரிப் பள்ளி களைச் சேர்ந்த 2,358 மாணவர்களும், ஆதி திராவிடர் (37), &nbsp;பழங்குடியினர் (169) பள்ளிகளைச் சேர்ந்த 206 மாணவர்களும் &nbsp;93 முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் 50 துறைகளில் மேற் படிப்பு பயில்கின்றனர். அதில் 41 பேர் ஐஐடி-களிலும், 22 பேர் &nbsp;முழு உதவித்தொகையுடன் வெளிநாடுகளிலும் படிக்கின்றனர். இந்த ஆண்டு ஐஐடி நுழைவுக்கான முதற்படியை அரசு &nbsp;மற்றும் மாதிரிப் பள்ளிகளைச் சேர்ந்த 448 மாணவர்களும், ஆதி திராவிடர் (13), பழங்குடியினர் (55) பள்ளிகளைச் சேர்ந்த &nbsp;68 மாணவர்களும் வெற்றிகரமாகக் கடந்துள்ளனர். பெரும்பா லும் முதல் தலைமுறையினராகக் கல்விச் சாலைக்குள் நுழைந்த &nbsp;இந்த மாணவர்கள் நாட்டின் முன்னணி நிறுவனங்களை அடைந் திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என முதல்வர் பாராட்டினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram