காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் சிலை தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்
21 Feb 2026, 3:26 pm
<p><strong>காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் சிலை தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்</strong></p>
<p>சிவகங்கை, பிப்.21- ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத் தியா கம் செய்த விடுதலைப் போராட்ட வீரர் களான மருது பாண்டிய சகோதரர்களுக்கு சிவ கங்கை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையை, தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயி லாக திறந்து வைத்தார். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூரக்குளம் ஊராட்சியில், வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டப வளாகம் அருகே இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் சுமார் ரூ.1.06 கோடி செலவில் சிலை அமைக்கப் பட்டுள்ளது. விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகி யோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை), எஸ்.மாங்குடி (காரைக்குடி) உள்ளிட்டோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு நினைவு மண்டபங்கள் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வர லாறு இளைஞர் தலைமுறைக்கு முன்மாதிரி யாக அமைய வேண்டும் என்றும், நாட்டுப் பற்று மற்றும் சமூகப் பொறுப்பு உணர்வை வளர்க்கும் வகையில் இத்தகைய நினைவுச் சின்னங்கள் முக்கியம் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர். விழாவில் சிவகங்கை நகர்மன்ற தலை வர் சி.எம்.துரை ஆனந்த், துணைத் தலை வர் கார்கண்ணன், பல்வேறு துறை அதிகாரி கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.</p>
