தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அதிருப்தி -
1 Feb 2026, 3:51 pm

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அதிருப்தி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27 நிதி யாண்டுக்கான பட்ஜெட், தொழில் வணிகத் துறையினரின் எதிர்பார்ப்பு களை நிறைவேற்றத் தவறிய ஒரு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது எனத் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்துச் சங்கத்தின் தலைவர் டாக்டர் என். ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழக்கமான அறிவிப்புகளே மிச்சம் நிதியமைச்சராகத் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன் அவர்களின் இன்றைய அறிவிப்புகள், தொழில் வணிகத் துறை சார்பாகப் பார்க்கும்போது ஒரு வழக்கமான அறிக்கையாகவே உள்ளது. மாவட்டந்தோறும் மகளிர் விடுதி,

ஆதிச்சநல்லூர் கலாச்சார மையம், புதிய நீர்வழிப் பாதைகள் மூலம் போக்குவரத்தை 12 சதவீதமாக உயர்த்துவது, வெளிநாட்டுச் சுற்றுலா பேக்கேஜ்களுக்கான TCS 2 சதவீதமாகக் குறைப்பு, சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சிக்கு ₹10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை எல்லாம் வழக்கமான அறிவிப்புகளாகவே உள்ளன. வரவேற்கத்தக்க சில அம்சங்கள் நாடு முழுவதும் புதிதாக 7 அதிவேக ரயில் தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; அதில் ஹைதராபாத் - சென்னை மற்றும் சென்னை - பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடம் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல், நாட்டின் நிதிப் பற்றாக்குறை 6.5 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதும் வர வேற்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்படு கிறது. தமிழகம் மற்றும் மதுரை புறக்கணிப்பு: பெருத்த ஏமாற்றம் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், மாநிலத்திற்கான எந்தவொரு சிறப்பு அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. குறிப்பாக மதுரை மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளான:

• மதுரை மெட்ரோ ரயில் திட்டம் • பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் நைபர் (NIPER) கல்வி நிறுவனம் • மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்- போன்ற எந்தவொரு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. முக்கியத் துறைகளுக்கான குறைந்த நிதி ஒதுக்கீடு வேளாண் துறை (₹1,62,671 கோடி), கல்வி (₹1,39,289 கோடி), பொது சுகாதாரம் (₹1,04,599 கோடி) மற்றும் தொழில் வர்த்தகத் துறை (₹70,296 கோடி) ஆகிய முக்கியமான துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மிகவும் குறைவாகும். இத்துறைகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு தற்போதைய ₹4 லட்சத்திலிருந்து கூடுதலாக உயர்த்தப்படாததும் ஏமாற்றமே. ஆக மொத்தத்தில், தொழில் வணிகத் துறை யின் வளர்ச்சிக்குத் தேவையான உத்வேகம் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது வருத்த மளிக்கிறது.