தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு - உங்கள் விவரங்களை பதிவு செய்வது எப்படி?

yesterday
தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு - உங்கள் விவரங்களை பதிவு செய்வது எப்படி?

16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் இன்று முதல் சுய கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இந்த சுய கணக்கெடுப்பு ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கணக்கெடுப்பு அதிகாரி சுந்தரேஷ் பாபு தெரிவித்ததாவது:

பொதுமக்கள் se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து சுய கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம். இதில் மொத்தம் 33 விவரங்களை பதிவிடும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், சுய கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியாதவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கூடுதல் வசதி மட்டுமே. ஆகஸ்ட் 1 முதல் கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிக்கும் போது, அவர்களிடம் தேவையான தகவல்களை வழங்கி பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுய கணக்கெடுப்பு செய்வது எப்படி?

1. se.census.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

2. உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, OTP மூலம் உள்நுழையுங்கள்.

3. மாநிலம், மாவட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்பு தொடர்பான விவரங்களைத் தேர்வு செய்யுங்கள்.

4. டிஜிட்டல் வரைபடத்தில் உங்கள் வீட்டின் இருப்பிடத்தைக் குறிக்கவும்.

5. வீடு மற்றும் குடும்பம் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.

6. அனைத்து தகவல்களையும் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு SE ID வழங்கப்படும்.

7. அந்த SE ID-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

8. கணக்கெடுப்பாளர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, அந்த SE ID-ஐ வழங்குங்கள்.

9. அதன் பின்னர், கணக்கெடுப்பாளர் உங்கள் தகவல்களை உறுதிப்படுத்தி கணக்கெடுப்பு பணியை நிறைவு செய்வார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.