முந்தய பக்கம்

குடிமைப் பணித் தேர்வில் தமிழக தேர்வர்கள் சாதனை!

6 Mar 2026, 3:17 pm
குடிமைப் பணித் தேர்வில்  தமிழக தேர்வர்கள் சாதனை!
<p><strong>குடிமைப் பணித் தேர்வில் &nbsp;தமிழக தேர்வர்கள் சாதனை!</strong></p> <p>மதுரை, மார்ச் 6 - &nbsp;யுபிஎஸ்சி எனப்படும் குடிமைப்பணி தேர்வுகளுக்கான முடிவுகள் அறி விக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர், முதல் 10 இடங்களுக்கு வந்து &nbsp;சாதனை படைத்துள்ளனர். மேலும் 10 &nbsp;ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக தேர்வர் கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர். 2025 ஆம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் மார்ச் 6 அன்று வெளி யிடப்பட்டன. இதில் மொத்தம் 958 பேர் தேர்ச்சி பெற்று, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப் எஸ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். &nbsp;பொதுப் பிரிவில் இருந்து அதிகபட்ச மாக 317 பேர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். &nbsp;ஓபிசி பிரிவில் இருந்து 306 &nbsp;பேரும், எஸ்சி பிரிவில் இருந்து 158 பேரும், எஸ்டி பிரிவில் இருந்து 73 பேரும் தேர்ச்சி &nbsp;பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளின்படி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி அகில இந்திய அள வில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், மதுரை வாடிப்பட்டி யைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவே, அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும், &nbsp;செங்கல்பட்டைச் சேர்ந்த ராஜா மொகை தீன் 7-ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். &nbsp;இந்த ஆண்டு யுபிஎஸ்சி நேர்காணலில் தமிழகத்தைச் சேர்ந்த 140 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் வெற்றிபெற்றிருப்பவர்களில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பிடித்த ராஜேஸ்வரி சுவே உட்பட 56 தேர்வர்கள் &lsquo;நான் முதல்வன்&rsquo; திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram