கேபிள் டிவி வணிக மின்சாரத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநாடு கோரிக்கை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநாடு கோரிக்கை
4 Nov 2026, 8:40 pm

கேபிள் டிவி வணிக மின்சாரத்திற்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநாடு கோரிக்கை

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, நவ.4 -தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச் சங்கத்தின் 23 ஆவது மாநில பொதுக்குழு மாநாடு, திருச்சியில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப.வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர்

பி.விஷ்ணுவர்த்தன் வரவேற்புரையாற்றி னார். ‘தடைகளை உடைத்து வெள்ளி விழா

வை நோக்கி’ என்ற தலைப்பில் நிறுவனத் தலைவர் பி.சகிலன் சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டில் ஒன்றிய அரசு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் கட்டண சேனல்களின் கட்டணத்தை குறைக்க வேண்டும். கேபிள் டிவி சேவைக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். கேபிள் டிவி வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும். அரசு கேபிள் டிவி செயல்பாடுகளை சீரமைத்தல் மற்றும் ஒன்றிய அரசின் முறையான அனுமதியுடன் இயக்க வேண்டும் என்பன

உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில், மாநிலத் தலைவராக சுப. வெள்ளைச்சாமி, மாநிலச் செயலாளராக எஸ். ராதாகிருஷ்ணன், மாநிலப் பொருளாளராக பி. விஷ்ணு வர்த்தன் மற்றும் 193 மாநில செயற்குழு உறுப்பினர்களும், 25 பேர் கொண்ட மாநில உயர்மட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

இதில் மாநில துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத் தலைவர் ஜி.வெங்கடேஷ் நன்றி கூறினார்.