தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு முதலமைச்சர் விஜய்க்கு உள்துறை; செங்கோட்டையனுக்கு நிதித்துறை!
16 May 2026, 10:31 pm

தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு முதலமைச்சர் விஜய்க்கு உள்துறை; செங்கோட்டையனுக்கு நிதித்துறை!

சென்னை, மே 16 - தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற முதலமைச் சர் உள்ளிட்ட 10 அமைச்சர் களுக்கும், ஒரு வாரத்திற்குப் பின், துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த மே 10 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். 9 அமைச்சர் களும் பதவியேற்றனர். எனி னும், அப்போது, அவர்க ளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

இந்நிலையில், முதல மைச்சரின் தனிச் செயலாளர் செந்தில்குமார், ஆளுநர் அர் லேகரை, சனிக்கிழமை (மே 16) அன்று சந்தித்து அமைச்ச ரவை விரிவாக்கம் மற்றும் துறைகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது முதலமைச்சர் கொடுத்த பட்டியலை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, முத லமைச்சர் உள்பட 10 அமைச் சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளன. அதன் விபரம் வரு மாறு:

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்: பொது நிர்வாகம், காவல்துறை, உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம்.

என்.ஆனந்த்: ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை (ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், கிரா மப்புறக் கடன்கள் மற்றும் பாசனம், சிறுபாசனம் உள் ளிட்ட பாசனத் திட்டங்கள்).

ஆதவ் அர்ஜுனா: பொதுப் பணி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை (பொதுப்பணி, கட்டடங்கள், நெடுஞ்சாலைகள், துறை முகங்கள் மற்றும் விளை யாட்டு மேம்பாடு).

கே.ஜி. அருண்ராஜ்: மக் கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி, குடும்ப நலத்துறை (சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்).

கே.ஏ. செங்கோட்டை யன்: நிதித்துறை (நிதி, ஓய்வூ தியம் மற்றும் ஓய்வூதியப் படிகள்).

பி.வெங்கடரமணன்: உணவு, உணவு வழங்கல் (உணவு மற்றும் குடி மைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாது காப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு).

ஆர். நிர்மல்குமார்: ஆற் றல் (மின்சாரம்), சட்டத்துறை (மின்சாரம் - மரபுசாரா எரி சக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச் சாலைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டமன்றம், ஆளு நர், தேர்தல்கள் மற்றும் பாஸ்போர்ட்).

ராஜ்மோகன்: பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி விளம்பரத் துறை (பள்ளிக்கல்வி, தொல்லி யல் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண் பாடு, செய்தி, விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படச் சட்டம், செய்தித்தாள் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, அரசு அச்ச கம்).

டி.கே. பிரபு: இயற்கை வளங்கள் (கனிமங்கள் மற் றும் சுரங்கங்கள்).

எஸ். கீர்த்தனா: தொழில் துறை (தொழில்துறை, முத லீட்டு ஊக்குவிப்பு).