46 முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்கச்சலுகை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
23 Feb 2026, 5:35 pm
<p><strong>46 முதலீட்டு திட்டங்களுக்கு ஊக்கச்சலுகை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு</strong></p>
<p>சென்னை, பிப். 23 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் திங்களன்று (பிப்.23) தலைமைச் செயலகத்தில் 24-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்பிறகு செய்தி யாளர்களிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா கூறிய தாவது: தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்பட மற்றும் விரிவா க்கம் மேற்கொள்ளப்பட வுள்ள 46 முதலீட்டுத் திட்டங்களுக்கு, ஊக்க சலுகைகள் வழங்க அமைச் சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 31ஆயிரத்து 592 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள உறுதி யளிக்கப்பட்ட திட்டங்க ளால் 61ஆயிரத்து 521 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளது. இத்திட்டங் கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட வுள்ளது. சக்தி ஏர்கிராப்ட் இன்டஸ்ட்ரி நிறுவனத்தின் பயிற்சி விமான உபபாகங்கள் இணைத்தல் மற்றும் பராமரிப்பு, என்எம்பி மயின்பியா செமிகண் டக்டர் உற்பத்தி, டிக்சான் குழுமத்தின் மின்னணு வியல் சாதனங்கள் உற்பத்தி, விக்ரம் சோலார் நிறுவனத்தின் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மின்கலன் சேமிப்பு அமைப்பு தொகுத்தல், செயின்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தயாரிப்புகள் உள்ளிட்ட பல முதலீடு களுக்கு அனுமதி வழஙகப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.</p>
