முந்தய பக்கம்

அமைச்சரவையில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை

5 Jun 2026, 8:53 pm
அமைச்சரவையில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை

அமைச்சரவையில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை

சென்னை, ஜூன் 5 - முதல்வர் ச. ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் வெள்ளிக் கிழமை (ஜூன் 5) அன்று தலைமைச் செயலகத்தில், காலை 10.10 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடை பெற்றது.

‘வெற்றித் தமிழகம்’ என்று தலைப்பிடப்பட்ட இந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மகளிர் மேம்பாடு, விவசாயிகள், மீனவர் கள், இளைஞர்கள் மேம்பாடு, லஞ்ச மற்ற நல்லாட்சி, போதை இல்லாத தமிழகம் உட்பட 436 தொலை நோக்கு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

ஒவ்வொரு துறைக்கும் தொடர் புடைய அமைச்சர்கள் அதிகாரி களுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

மேலும், முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை மற்றும் வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram