சமூகநீதிக் கணக்கெடுப்புக்கு தமிழகத்தில் தனி ஆணையம்! அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
29 Oct 2026, 9:36 pm

சமூகநீதிக் கணக்கெடுப்புக்கு தமிழகத்தில் தனி ஆணையம்!

அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

சென்னை, அக். 29 -முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் மூன்றாவது கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (அக். 29) நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் நோக்கில்,சமூகநீதிக் கணக்கெடுப்பை நடத்துவதற்குத் தனி ஆணையம் அமைக்கக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.சுமார் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் நீடித்த இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தலைமைச் செயலக வளாகத்தில்அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் புதிதாகத் தொழில்தொடங்கவுள்ள 8 நிறுவனங்களுக்கு அனுமதி, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ‘சமூகநீதிக் கணக்கெடுப்பு ஆணையம்’ அமைப்பது உட்பட நான்கு முக்கிய முடிவுகள்எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

சமூகநீதிக் கணக்கெடுப்பு

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி மாதத்தில் சமூகநீதிக் கணக்கெடுப்பு ஆணையம் அமைக்கப்படும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்தவுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். பொருளாதார ரீதியிலான கணக்கெடுப்புப் பணி களும் மேற்கொள்ளப்படும்.மதம் மாறியோர் வழக்கில் சீராய்வு மனுஇஸ்லாம் மதத்துக்கு மாறியவர் களுக்குப் பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்டதுதொடர்பான தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. வரும் நாட்களில் இந்த மனு தாக்கல் செய்யப்படும்.

முதல்வரின் அறிவுறுத்தல்கள்

மக்களுக்கு எது தேவையோ, அதற்கே அமைச்சர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்அறிவுறுத்தினார். குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும்என்றும் அவர் வலியுறுத்தினார்.

தாழம்பூர் நிலப் பிரச்சனைதாழம்பூரில் 600 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும், அங்கு வசிக்கும் 3,000 குடும்பங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நிலம் வழங்குவது தொடர்பாகப் பின்னர் முடிவெடுக்கவும்அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது.

சிறைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும், ஊழல்களைச் சீரமைக்கவும், பணியாளர் பற்றாக்குறையைப் போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிறைச்சாலைகளில் பார்வையாளர்கள் ஆன்லைனில் வருவதற்கான ஏற்பாடுகளும், கோவை, மதுரையில் புதிய மத்திய சிறைச்சாலைகள் கட்டும் பணிகளும்நடைபெறுகின்றன. செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில் விசாரணை தொடர்கிறது. இவ்வாறுஅமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

முதல்வருடன் கலையரசன் சந்திப்பு

இதனிடையே, காவல் துறையினரால் தவறாகக் கைது செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிஞர் கலையரசன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்-யைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது மாநிலத்தின் பொருளாதார நிலவரங்கள் மற்றும் பல்வேறுதிட்டங்கள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.