இன்றைய அரசியல் நிலையும் தமிழக இடைத்தேர்தலும் - பி.சம்பத்
2 Oct 2026, 8:56 pm

இன்றைய அரசியல் நிலையும் தமிழக இடைத்தேர்தலும் - பி.சம்பத்

மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் - இந்துத்துவக் கொள்கைகளை அதிதீவிரமாக அமல்படுத்தி வருகிறது. தாராளமய, தனியார்மய முறைகேடுகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் மக்களிடையே துயரங்கள் அதிகரித்து, பாஜக அரசின் மீது அதிருப்தி வளர்ந்து வருகிறது. ஆனால், ஆர்எஸ்எஸ்-ன் அடிப்படையான ‘இந்து ராஷ்டிரத்தை உருவாக்கும்’ இந்துத்துவக் கொள்கைகளைத்திட்டமிட்டு அமல்படுத்தி, மக்களின் மத உணர்வை வெறியாக மாற்றித் தன் பிடியைத் தக்க வைக்கவும்பலப்படுத்தவும் பாஜக முனைந்து செயல்படுகிறது.

இந்துத்துவ நிகழ்ச்சி நிரல்

பாஜக அரசானது பாபர் மசூதி தகர்ப்பு, ராமர் கோயில் கட்டுமானம், பசுவதை தடைச்சட்டம் (பாஜகஆளும் மாநிலங்களில்), குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA), சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR) போன்ற இந்துத்துவ நிகழ்ச்சி நிரல்களை ஏற்கனவேஅரங்கேற்றிவிட்டது. சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் (வழிபாட்டுத் தலங்கள் உட்பட) மற்றும்அவர்களின் உரிமைகள் - சலுகைகள் பறிப்பு ஆகியன அன்றாட நிகழ்வாக உள்ளன. நாடாளுமன்றத்தில்பாஜகவிற்குப் பெரும்பான்மை இல்லாதபோதும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ்குமாரின்ஐக்கிய ஜனதா தளம்போன்ற சந்தர்ப்பவாதப் பிராந்தியக் கட்சிகளின் துணையுடன் நாடாளுமன்றத்தில் தனக்குத் தேவையானஅரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றிக் கொண்டது. வேறு சில சந்தர்ப்பவாதப் பிராந்தியக் கட்சிகளையும் தன்பக்கம்இழுக்க நயவஞ்சகமாகப் பல்வேறு தந்திரங்களைக் கையாளுகிறது பாஜக.

ஒரு காலத்தில் ‘ஜனநாயகம், மதச்சார்பின்மை’ கோட்பாடுகளைப் பாதுகாப்பதில் வரலாற்றுச் சிறப்பு

மிக்க பாத்திரம் வகித்த பிராந்தியக் கட்சிகள், 1990-களில் சோசலிச சோவியத் ஒன்றியத்தின் பின்னடை

வுச்சூழலில் பிறகு உருவான ஏகாதிபத்திய ஆதரவு நவதாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கத்திற்குப் பிறகு, மேற்கண்ட உயரிய கோட்பாடுகள் மீதான நம்பிக்கையை இழந்து அதிகாரத்தைப் பெறச் சுயநலத்துடன் செயல்பட்டு வருவது துயரமான போக்காகும். தமிழகத்தில் செயல்படும் பிராந்தியக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

கார்ப்பரேட் கொள்ளை -மக்களின் துயரம்

தாராளமயக் கொள்கைகளால் நகர்ப்புற, கிராமப்புற உழைப்பாளி மக்களின் ‘உண்மை ஊதியம்’ பெருமளவில் குறைந்துவிட்டது. காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங்,தொகுப்பூதியம் போன்றதாக்குதல்களால் உழைக்கும் வர்க்கத்தின் உள்ளடக்கமும் வாழ்நிலையும் சிதைந்து வருகிறது. மறுபுறம்,தாராளமய அடிப்படைகளான விவசாயச் சீர்திருத்தங்கள், நிலக்குவிப்பு, ரியல் எஸ்டேட் விஸ்தரிப்பு, கந்துவட்டிக் கொடுமை, விவசாயக் கூலி குறைப்பு போன்றவற்றால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.இதனால் இந்திய மக்களின் வாங்கும் சக்தி தேசம் தழுவிய அளவில் குறைந்துள்ளது. இதனால் இந்தியப் பொருள்உற்பத்தியின் தொழில் நிறுவனங்கள் இந்தியச் சந்தையைச் சார்ந்திருப்பது குறைந்து, வெளிநாட்டுச் சந்தையை நோக்கி நகர்வது அதிகரித்துள்ளது.

ஆனால், ஏகாதிபத்தியம், குறிப்பாக அமெரிக்கஏகாதிபத்தியத்தின் தாக்குதலால் உலகப் பொருளாதாரச் சந்தையில் இந்தியப் பொருள் விற்பனைக்கான வாய்ப்பும் மிகக் குறைவே. இதனால் பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்கிவரும் கார்ப்பரேட் ஏகபோகநிறுவனங்களைப் பாதுகாக்க ஒன்றிய பாஜக அரசு ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகிறது. புதிய புதிய வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் லட்சோபலட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது. இதன் பிறகும் இந்நிறுவனங்களுக்குப் புதிய கடன்கள் வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை. மேலும், இந்தியாவின் இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாட பாஜக அரசு அனுமதி வழங்குகிறது. நிலக்கரி, எரிவாயு, தாதுக்கள்நிறைந்த இந்தியச் சுரங்கங்கள் குறைந்த கட்டணத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்படுகின்றன.

மேலும், பல லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்தியமக்களின் கனவாக உருவெடுத்த பெரும் கனரகஇயந்திரப் பொதுத்துறை நிறுவனங்கள், பெரும் மின்உற்பத்தி நிலையங்கள் அடிமாட்டு விலைக்குக்கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. இவற்றில் பணியாற்றும் லட்சக்கணக்கான உழைப்பாளி மக்களின் வாழ்நிலையும் துயரமும் சொல்லிமாளாது.

பாஜக பின்னடைவும் தேர்தல் மோசடியும்

மேற்கண்ட சூழ்நிலையில் உருவாகிவரும் மக்களின் அதிருப்தியானது, பாஜகவை அதிகாரத்தை இழக்கும் நிலை நோக்கித் தள்ளி வருகிறது. கடந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆனால், அதிகாரத்தைத் தக்கவைக்கவும் தன்னைப் பலப்படுத்தவும் தேர்தல் மோசடிகளில்இறங்கியுள்ளது பாஜக அரசு. இதற்காகவே தேர்தல் ஆணையர்கள் நியமன முறையைத் தனக்கு சாதகமாகமாற்றிக் கொண்டது பாஜக அரசு. தனதுகையாள் ஒருவரைத் தலைமைத் தேர்தல் ஆணையாளராக நியமித்துக் கொண்டது. இந்தத் தலைமைத் தேர்தல் ஆணையர் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட மாண்புகளுக்கும் மாறாக, இதர இரு ஆணையாளர்களின் கருத்துகளையும் கூட புறக்கணித்து ஆர்எஸ்எஸ் - பாஜகஉத்தரவுகளைத் தானடித்த மூப்பாக அமல்படுத்தி வருகிறார். நாடு முழுவதும் சில கோடி மக்களின் வாக்குகளை எஸ்ஐஆர் மூலம் நீக்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்முறையாகவும், அசாமில் மீண்டும்அதீத பலத்திலும் அதிகாரத்தைக் கைப்பற்றிய ‘ரகசியக்’ கதை இதுதான்.

போராட்ட எழுச்சி

ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பலின் இத்தகைய அரசியல் - வகுப்புவாத அத்துமீறல்களைத்தான் “நவீன பாசிச” குணாம்சம் கொண்டவை என சிபிஐ(எம்) வரையறுத்துள்ளது. இத்தகைய பாசிசத் தன்மையிலான பாஜக அரசின் அத்துமீறல்களைக் கண்டித்துநாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இடதுசாரி இயக்கங்கள், ‘இந்தியா’கூட்டணி போன்ற வலுவான அரசியல் இயக்கங்களின் எழுச்சிப் போராட்டங்கள் தலைமைத் தேர்தல்ஆணையரைப் பதவிநீக்கம் செய்யாமல் ஓயாது என்பதில் ஐயமில்லை.

தமிழக இடைத்தேர்தலும் தவெகவும்

இத்தகு பின்னணியில்தான் தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் தவெக கட்சியானது இந்த பாசிச அபாயத்தை எதிர்த்துப் போராட மறுப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மறுப்பது மட்டுமல்லாமல், தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரும் எழுச்சிப் போராட்டத்தைத் திசைதிருப்பும் வேலையைத் தவெக செய்கிறது. மறுபுறம், தன்னை மாற்று எனக் கூறிக்கொண்டே பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுககடைப்பிடித்த தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை எவ்வித ‘மாற்றமுமின்றி’ அதிதீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்து 5 மாத காலமே ஆன போதிலும், இதன் ஆரம்பமேகடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது. மறுபுறம், காவல்துறை உட்பட அதிகார வர்க்கத்தின் அத்துமீறலைக்கட்டுப்படுத்துவதில் தவெக அரசின் செயலின்மையை பல அம்சங்களில் கண்கூடாகக் காண்கிறோம். தவெகஅரசின் இத்தகு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் இல்லையெனில், அதன் மக்கள் செல்வாக்குபடிப்படியாகச் சரியும் என்பதில் ஐயமில்லை.

இதர அரசியல் கட்சிகள்

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த திமுக, அதற்கான அரசியல், பொருளாதார, சமூகக் காரணங்களை முழுமையாக ஆய்வு செய்துதன்னை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்ளாதது துயரமான நிகழ்வாகும். மாறாக, தங்களுக்குத் தோல்வியைத் தந்த மக்கள் மீது பழி சுமத்தி திமுக தலைவர்கள் பேசி வருவது ஏற்க முடியாத நிலைப்பாடாகும். திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை அனுபவித்துவிட்டு அதற்கு வாக்களிக்காதவர்கள் ‘விளங்கமாட்டார்கள்’ என்றும், ‘இவர்களுக்கு நல்லசாவு வராது’ எனவும் திமுக தலைவர்கள் புலம்பியதானது அவகேடானதாகும். மேலும், தங்களைத் தோற்கடித்தவர்களை ‘இடியட்ஸ்’ என்றும் ‘நான்சென்ஸ்’ என்றும் பேசி வருவது அநாகரிகமானதாகும். திமுகதனது ஆட்சிக்காலத்தில் கடைப்பிடித்த தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், காவல்துறை அட்டூழியங்கள், ஜனநாயகப் போராட்டங்களுக்கு அனுமதிமறுப்பு, தொழிலாளர் விரோத நிலைப்பாடுகள், கீழிலிருந்து மேல் வரை ஊழல் போக்கு போன்றவற்றை உணர்வதும் மாற்றிக்கொள்வதும் இல்லாமல்மக்களின் நம்பிக்கையை மீண்டும் எவ்வாறு பெற முடியும்?

அதிமுக பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. இதில் பாசிச பாஜகவோடு அரசியல் உறவு வேறு.இவர்களின் கடந்த காலத் தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள், பாஜக ஆதரவு அரசியல் நிலைப்பாடு, வரலாறு காணாத ஊழல் போக்கு போன்றகாரணங்களாலேயே மக்கள் இவர்களை மிகவும் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். இந்நிலை நீடித்தால்இவர்கள் தேறுவது கடினம். ஜெயலலிதா உட்பட அதிமுக தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள். இந்நிலையில், ஊழல் கறைபடிந்த பல அதிமுக பிரமுகர்களைத் தவெக தன் கட்சியில் இணைத்துக்கொண்டு ஊழலுக்கு எதிராகப் போராடுவதாக முழங்குவது வேடிக்கைதான். அதிமுக எம்எல்ஏக்களைத் தன் கட்சியில் சேர்த்து மீண்டும் அவர்களையே வேட்பாளராகத் தவெக முன்னிறுத்தி இருப்பதுஜனநாயகத்திற்குச் சாபகேடானது என்பது மட்டுமல்ல, தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெறாத அநாகரிகமான செயலாகும்.

இடதுசாரி மாற்று

இத்தகு பின்னணியில்தான் சிபிஐ(எம்) உட்பட இடதுசாரி கட்சிகள் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தனித்துப் போட்டியிடும் சூழல் உருவானது. அரசியல், பொருளாதார, சமூகக் கொள்கைகளில் முதலாளித்துவக் கட்சிகளுக்கு முற்றிலும் மாறான, மக்களுக்கு நிவாரணம் தரும் உண்மையான மாற்று இடதுசாரிகளே என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. மேற்குவங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் சில பத்து ஆண்டுகள் இடதுசாரி அணி அதிகாரத்தில் இருந்தபோதும் ஊழல், முறைகேட்டிற்கு ஒருபோதும் உள்ளானது இல்லை. தமிழகத்தில் கொள்கை நிலைப்பாடுகளில் மட்டுமின்றி மக்களின் வாழ்நிலைகளிலும் மாற்றம் நிகழவேண்டுமெனில், இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டியது ஜனநாயக சக்திகள் மற்றும் மக்களின் கடமையாகும்.