‘இடதுசாரிகளின் பலம் அதிகரிக்க வாக்களியுங்கள்’ இடைத்தேர்தல் பரப்புரை நிறைவு; நாளை வாக்குப்பதிவு
4 Oct 2026, 10:46 pm

‘இடதுசாரிகளின் பலம் அதிகரிக்க வாக்களியுங்கள்’ இடைத்தேர்தல் பரப்புரை நிறைவு; நாளை வாக்குப்பதிவு

சென்னை, அக்.4 -மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளி லும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடிதொகுதியிலும் இடைத்தேர்தல் பரப்புரை ஞாயிற்றுக்கிழமை (அக்.4)மாலை 6 மணியுடன் நிறைவடைந் தது. மூன்று தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (அக்.6) காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குகள் அக்டோபர் 9 அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். பரப்புரை ஓய்ந்த நிலையில்,வாக்குப்பதிவு முடியும் வரை கடுமையான தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

கே.பாலகிருஷ்ணன் - பெ. சண்முகம் நிறைவுப் பிரச்சாரம்

மதுராந்தகத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா. சுகந்தியை ஆதரித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இறுதிக்கட்டப் பிரச்சாரம் மேற்கொண்டார். காந்திசிலை அருகில் தொடங்கி செங்குந்தர்பேட்டையில் நிறைவடைந்த ஊர்வலத்தின் இறுதியில் அவர்பேசுகையில், இந்த இடைத்தேர்தல் இயற்கையாக வந்தது அல்ல, செயற்கையாக உருவாக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார். மக்களின் நம்பிக்கையைப் பெற்று வென்ற பிறகு, சில மாதங்களிலேயே ராஜினாமா செய்து வேறு கட்சியில் சேர்ந்து, அரசியலைப் பயன்படுத்திச் சொத்துக் குவித்த பொறுப்பற்ற நபர்களுக்கு மீண்டும் வாக்க ளிக்கக் கூடாது என்றார்.இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை, ஜோசப் விஜய் தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் எனக் கூறிய சண்முகம், வெற்றிக்காகப் பிற கட்சியினர் கோடிக்கணக்கான ரூபாயைப் பணமாகவும், டிஜிட்டல் முறையிலும், டிபன் பாக்ஸ்களுக்குள் டோக்கன் முறையிலும் வாரி இறைப்பதாகக் குற்றம் சாட்டினார். பணமே கொடுக்காத கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே கொள்கைகளையும் செய்த/செய்ய விருக்கும் பணிகளையும் எடுத்து ரைத்து வாக்கு சேகரிப்பதாக அவர் தெரிவித்தார்.உழைப்பாளிகள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், குழந்தைகளின் பிரச்சனைகளுக்காகச் சட்டமன்றத்தில் உரக்கக் குரல் கொடுப்பது இடதுசாரிகள் மட்டுமே எனவும், மக்கள் பிரச்சனைகளைப் பேசாமல் நேரத்தை வீணடிக்கும் நிலையை மாற்றி சட்டமன்றத்தை மக்களுக்கான மன்றமாக மாற்ற இடதுசாரிகளின் பலம் அதிகரிக்க வேண்டும் என்று சட்டமன்றக் குழுத் தலைவர் ஆர். செல்லசாமி சுட்டிக்காட்டியதை நினைவுகூர்ந்த அவர், அரிவாள்-சுத்தியல்-நட்சத்திரம் சின்னத்தில் சுகந்திக்கு வாக்களித்துப் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இப்பிரச்சாரத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன்,மாவட்டச் செயலாளர் ப.சு. பாரதி அண்ணா உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் சுகந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, எம்.சிவக்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. சங்கர், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் பேசினர்; வாலிபர் சங்க மாநில நிர்வாகி அரவிந்த் சாமி, மாணவர் சங்க மாநிலத் தலைவர் மிருதுளா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தாராபுரத்தில் லட்சுமணன் தீவிர வாக்குசேகரிப்பு

தாராபுரத்தில் இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ப.லட்சுமணன், நிறைவு நாளில் கரூர் சாலை, மூலனூர் சாலை, அலங்கியம் சாலை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.குடிநீர்த் தட்டுப்பாடு, சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து மக்களிடம் அவர் கேட்டறிந்தார். சிபிஐ மாநில துணைச் செயலாளர் எம்.ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பரப்புரையில் ஈடுபட்டனர். வாகனப் பிரச்சாரம், வீதி பிரச்சாரம், வீடுவீடாகத் துண்டுப்பிரசுரம் வழங்குதல் எனப் பல்வேறு வடிவங்களில் பரப்புரை நிறைவடைந்தது.

பிரதான கட்சிகளின் இறுதிநாள் பரப்புரை

திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் தலைவர்களும் இறுதி நாளில் வாக்குச் சேகரித்தனர். முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுராந்தகத்தில் இரண்டு நாட்கள் பரப்புரை மேற்கொண்டார்; தாராபுரத்தில் செப்டம்பர் 30 அன்று பரப்புரை மேற்கொண்டு அங்கேயே நிறைவு செய்தார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தாராபுரம், மதுராந்தகம் பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாராபுரத்தில் பரப்புரை செய்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரு தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டார்.