தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத்தில் தாக்கல் ஆன தமிழக நிதிநிலை அறிக்கை: முக்கிய அறிவிப்புகள் என்ன?

yesterday
சட்டமன்றத்தில் தாக்கல் ஆன தமிழக நிதிநிலை அறிக்கை: முக்கிய அறிவிப்புகள் என்ன?

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பதவியேற்ற பிறகு, முதல் நிதிநிலை அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையில் பல்வேறு புதிய மற்றும் தொடர்ச்சியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்:

* 'தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு.

* 3,734 அரசுப் பள்ளிகளை ரூ.2,132 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் திட்டம்; இதில் இந்த ஆண்டிற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி பாடத்திட்ட மறுசீரமைப்பிற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு.

* 11ஆம் வகுப்பு மாணவர்கள் 5.32 லட்சம் பேருக்கு ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் சைக்கிள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.277 கோடி ஒதுக்கீடு.

* பொதுநூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மறுவடிவமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

* செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை வடிவமைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.

* சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி நிதி ஒதுக்கீடு.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி மற்றும் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு.

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,051 கோடி நிதி ஒதுக்கீடு.

* 12 லட்சம் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒரு லட்சம் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.

* மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,485 கோடி நிதி ஒதுக்கீடு.

* கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 'வெற்றி 150’ திட்டம் அறிமுகம். 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு.

* மூத்த குடிமக்களுக்கான புனிதப் பயணத் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.

* இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு.

இவை தவிர, பல்வேறு துறைகள் மற்றும் நலத்திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்ஜெட் மீது ஆக. 7 முதல் விவாதம் தொடங்கும் எனவும் செப்டம்பர் 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.