தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆட்டோ கட்டண முறை அரசாணைக்கு சிஐடியு வரவேற்பும் எதிர்வினையும்!

28 Oct 2026, 10:02 pm
13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆட்டோ கட்டண முறை அரசாணைக்கு சிஐடியு வரவேற்பும் எதிர்வினையும்!

13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆட்டோ கட்டண முறை அரசாணைக்கு சிஐடியு வரவேற்பும் எதிர்வினையும்!

சென்னை, அக். 28 –தமிழகத்தில் ஆட்டோ கட்டணங்கள் 13 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டு, குறைந்தபட்சக் கட்டணமாக ரூ. 50 நிர்ணயித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிய கட்டண விவரங்களின்படி, முதல் 1.8 கி.மீ. தூரத்திற்குக் குறைந்தபட்சக் கட்டணமாக ரூ. 50-ம், அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல்கிலோமீட்டருக்கும் ரூ. 25-ம் வசூலிக்கலாம்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தைவிட 1.5 மடங்கு கட்டணமும், காத்திருப்புக் கட்டணமாக நிமிடத்திற்கு ரூ. 1-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதைகளில் அடிப்படைக் கட்டணம் ரூ. 60 ஆகவும், கூடுதல்கிலோமீட்டருக்கு ரூ. 30 ஆகவும் இருக்கும்.

கடந்த 2013-இல் முதல் 1.8 கி.மீ-க்கு ரூ. 25 என்றும், கூடுதல் கி.மீ-க்கு ரூ. 12 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள்உயர்வைக் சுட்டிக்காட்டி தொழிற்சங்கங்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றஉத்தரவின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிஐடியு வலியுறுத்தல்இதனிடையே, கட்டண மாற்ற அரசாணை தொழிலாளர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக இருப்பினும், அரசு அறிவித்துள்ள கட்டண விகிதம் பொருத்தமற்றதாக உள்ளதாகத் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) தெரிவித்துள்ளது.

இதுகுறித்துச் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் எம். சிவாஜி விடுத்துள்ள அறிக்கையில், “தொழிற்சங்கங்கள் கோரிய குறைந்தபட்சக் கட்டணமான 1.5 கி.மீ-க்கு ரூ. 60, கூடுதல் கி.மீ-க்கு ரூ. 30 என்பதை விடுத்து அரசு அறிவித்துள்ள கட்டணம் போதுமானதல்ல” என்றார்.

மேலும், காலதாமதமின்றி அரசுச் செயலியைச் செயல்படுத்த வேண்டும், பன்னாட்டுச் செயலிகளில் இக்கட்டண முறையை உறுதி செய்ய வேண்டும், சட்டவிரோத பைக் டாக்சிகளைத் தடை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மானிய விலை எரிபொருள், இலவச ஜிபிஎஸ் மீட்டர், எப்.சி. கட்டண நிவாரணம் அல்லது ரூ. 15,000 நிதியுதவி, பண்டிகைக் கால நிதியாக ரூ. 5,000 மற்றும் ஆன்லைன் அபராத விலக்கு ஆகிய கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே ஆட்டோ தொழிலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் எனச் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.