ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ. 60 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சிஐடியு வலியுறுத்தல்
9 Jul 2026, 9:09 pm

ஆட்டோ கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ. 60 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சிஐடியு வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 9 – ஆட்டோ மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சம் 60 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டுமென்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது

. ஆட்டோ மீட்டர் கட்டணம் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த 13 ஆண்டு களாக மீட்டர் கட்டணம் மாற்றி யமைக்கப்படவில்லை.

இதுதொடர் பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2022-ஆம் ஆண்டு விலை உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க உத்தரவிட்டது.

கடந்த ஆட்சியில் அமைச்சர், அதிகாரிகள் தொழிற்சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி யும் கட்டணத்தை மாற்றி அமைக்க வில்லை. இதனை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஏராளமான போரா ட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பே ற்றுள்ள தவெக அரசு, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசனை நடத்தியது.

வியாழனன்று (ஜூலை 9) சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.

இதில், தமிழ்நாடு ஆட்டோ தொழி லாளர் சம்மேளனத்தின் செயல் தலை வர் எஸ். பாலசுப்பிரமணியம், பொரு ளாளர் இ. உமாபதி (சிஐடியு) உள்ளிட் டோர் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு ஆட்டோ செயலியை துவக்கி, மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

முதல் 1.5 கி.மீ-க்கு (மினிமம்) ரூ. 60, கூடுதலாக ஒவ்வொரு கி.மீ-க்கும் ரூ. 30, காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ஒரு ரூபாய், இரவுநேரக் கட்டணமாக ஒன்றரை மடங்கு என நிர்ணயிக்க வேண்டும்.

முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். ஓலா, உபேர், ரேபிடோ வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது. ஆன் லைன் அபராதத்திலிருந்து ஆட்டோ வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

அரசுப் பொது மருத்துவமனை களில், ஆட்டோ பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும், அண்டை மாநிலங் களைப் போன்று எப்சி-க்கு 10ஆயி ரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும், சிஎன்ஜி கேஸ் நிரப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டும், மாவட்ட எல்லைகளைக் கடந்து சவாரி செய்ய அனுமதிக்க வேண்டும், நலவாரியத்தி லிருந்து ஓட்டுநர்களுக்கு பண்டிகை போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.