தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாரா வானில் ஒலித்த தமிழ்ச் சங்கநாதம்!-சி.ஸ்ரீராமுலு

1 Nov 2026, 8:52 pm
பாரா வானில் ஒலித்த தமிழ்ச் சங்கநாதம்!-சி.ஸ்ரீராமுலு

பாரா வானில் ஒலித்த தமிழ்ச் சங்கநாதம்!-சி.ஸ்ரீராமுலு

‘நெஞ்சுரம் கொண்டவனுக்குக் குறை ஒருபோதும் தடையாவதில்லை!’ ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்றவள்ளுவன் வாக்குக்குத் தங்கள் வியர்வையால் இலக்கணம் எழுதியிருக்கிறார்கள் தமிழகத்தின் மாற்றுத்திறன் கொண்ட வீரர் - வீராங்கனைகள்.ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 5ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில், வறுமையையும், சதியையும் வியர்வையால் வென்றதமிழ் மண்ணின் மைந்தர்கள் கதை, ஞாயிறு விடியலில் வாசிக்க வேண்டிய உத்வேகக் காவியம்.

தங்க மகுடம் சூடியவர்கள்ஒற்றைக் காலில் வானம் தொட்ட சிறுத்தை: தூத்துக்குடிக் கடலோர மண்ணின் மகன் தர்மராஜ் சோலைராஜ். இவர் வறுமையிலும் தேசப்பற்றோடு ராணுவத்தில் சுபேதாராகச் சேர்ந்தார். பனிச்சரிவு ஏற்படுத்திய கோர விபத்தில் காலின் ஒரு பகுதியை இழந்தபோதும், அபோதைய நிலைமைக்கு அவர் மண்டியிடவில்லை.செயற்கைக் காலோடு தடகளக் களத்தில் புகுந்தார். ஆடவர் நீளம் தாண்டுதலில் 6.80 மீட்டர் பாய்ந்து,புதிய ஆசிய சாதனையையும் (தங்கப் பதக்கம்) புதிய பாரா விளையாட்டுச் சாதனையையும் ஒருசேரப் படைத்தார். “கால் போனாலும் நம்பிக்கை போகவில்லை” என்றுஉலகுக்குச் சொன்ன அந்தப் பாய்ச்சலுக்குத் தமிழக அரசு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிக் கவுரவித்துள்ளது.

காஞ்சி தந்த தங்க மங்கை : பட்டுக்குப் பெயர்பெற்ற காஞ்சிபுரத்தில், பிறவியிலேயே இடது கை இயக்கம் குறைந்த நிலையில் பிறந்தவர் துளசிமதி முருகேசன். உடலின் குறையை மனதின் குறையாக்காமல், வலது கையையே பேராயுதமாக்கினார். கால்நடை மருத்துவப்படிப்பையும் பேட்மிண்டன் பயிற்சியையும் ஒருசேரச் சுமந்த அவர், பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர், அர்ஜுனாவிருதாளர்

பதக்க நம்பிக்கையோடு களமிறங்கிய துளசிமதி முருகேசன் ஐச்சி - நகோயாவில் பெண்கள் இரட்டையர் பிரிவில்தங்கம் வென்றார். ஒற்றையரிலும், கலப்பு இரட்டையரிலும் வெள்ளி வென்று, மூன்று பதக்கங்களை அறுவடை செய்தார். போட்டியின் நாயகியாக உயர்ந்த அவருக்கு மொத்தம் ரூ.1.75 கோடி ஊக்கத்தொகை கிடைத்துள்ளது.

எழுச்சியின் இளம் புயல்: முறையான வசதிகளற்ற எளிய குடும்பத்திலிருந்து புறப்பட்டு, கடும் பயிற்சியால் பேட்மிண்டன் இந்திய அணியில் இடம் பிடித்தவர் நவீன் சிவக்குமார். ஆண்கள்ஒற்றையரில் அசாத்திய வேகத்துடன் ஆடித் தங்கத்தை முத்தமிட்டார். இதற்காக ரூ.75 லட்சம் பெறுகிறார்.இரட்டையரில் வென்ற வெண்கலத்துக்காக ரூ.30 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோரின் அன்றாடத் தியாகமும் தன் உழைப்பும் இரு தோள்களாகத் தாங்க, இளம் வீரர்களுக்கு அவர் ஒரு கலங்கரை விளக்கமாக நிற்கிறார்.வெள்ளி மின்னிய வீரர்கள்

உயரத்தில் குறைவு, லட்சியத்தில் இமயம்: சேலத்தின் எளிய குடும்பத்தில் உடல்வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்தசிவராஜன் சோலைமலை, சமூகத்தின் ஏளனப் பார்வைகளையும் வறுமையையும் கடந்து வந்தவர். பெற்றோர் தங்கள் வியர்வையையே அவர் கனவுக்கு முதலீடாக்கினர். பேட்மிண்டன் ஆடவர் இரட்டையரில் வெள்ளி வென்ற இவருக்கு, ரூ.50லட்சம் ஊக்கத்தொகை.கரூர் தந்த அர்ஜுனா நாயகி: குள்ளத்தன்மை (Achondroplasia) சவாலுடன் பிறந்தும், தந்தையின் உந்துதலாலும் முறையான பயிற்சியாலும் பேட்மிண்டனில் அசுர வளர்ச்சி கண்டவர்நித்யா ஸ்ரீ சுமதி சிவன். பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து புகழ்பெற்ற பேட்மிண்டன் அகாடமியில் பயின்றவர், அர்ஜுனா விருதாளர்.பாரீஸ் பாராலி ஒம்பிக்கில் வெண்கலம் வென்ற அவர், நகோயாவில் பெண்கள் ஒற்றையரில் வெள்ளி வென்றார்.

அதற்கு ரூ.50 லட்சமும், கலப்பு இரட்டையர் வெண்கலத்துக்கு ரூ.30 லட்சமும் அறிவிக்கப்பட்டது.இரும்பை வென்ற இரும்பு மனுஷி கஸ்தூரி ராஜாமணி : போலியோ இவரது கால்களை முடக்கியது; தோள்களின் வலிமையை முடக்க முடியவில்லை. வறுமையையும் ஏளனத்தையும் தூக்கியெறிந்து, பளுதூக்கும் மேடையில் இரும்போடு போரிட்டார். 42 வயதிலும் தளராதஅவர், பெண்கள் 67 கிலோ பளுதூக்குதலில் இறுதி முயற்சியில் 108 கிலோவைத் தூக்கி வெள்ளியைக்கைப்பற்றினார். இவருக்கும் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை.வெண்கலத்தில் மிளிர்ந்த விடாமுயற்சிஒற்றைக் கையில் எழுதிய இரட்டைச் சரித்திரம்: திருவள்ளூர் கிராமத்தில் பிறந்த மணிஷா ராமதாஸ்,பிறவியிலேயே ‘எர்ப்ஸ் பால்சி’ என்ற தசைப் பக்கவாதத்தால் வலது கையை நீட்ட முடியாத நிலையில் இருந்தார்.

மூன்று அறுவை சிகிச்சைகளும் பலனளிக்காதபோது, பேட்மிண்டனே அவருக்கு மறுவாழ்வு தந்தது. இடது கை ஆட்டத்தால் ஒற்றையர், கலப்புஇரட்டையர் என இரு வெண்கலங்களை வென்றார். தலா ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம்.விபத்தை வென்ற சென்னை வீரன்: சாலை விபத்து வாழ்வைப் புரட்டிப்போட்ட போதும், மீண்டு வந்து பாரா டேபிள்டென்னிஸ் களத்தைத் தேர்ந்தெடுத்தார் ஜெஹான். ஒற்றையரிலும் இரட்டையரிலும் வெண்கலம் வென்ற ஜெஹான்டொரப் மதனுக்கு, ஒவ்வொரு பதக்கத்துக்கும் ரூ.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சம்.முதல் தடம் பதித்த வீராங்கனை: டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையரில் வெண்கலம் வென்ற பேபி சஹானாரவி, இந்தப் பிரிவில் ஆசிய பாரா விளையாட்டுகளில் இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெற்றார்.

பிள்ளையின் திறமையை உணர்ந்து ஊக்கப்படுத்திய பெற்றோரின் தியாகத்துக்கு இந்தப் பதக்கமே காணிக்கை. இவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.தமிழ் மண்ணின் பெருமிதம்ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர் - வீராங்கனைகள் அசத்தலான செயல்பட்டால், கொடி உயரப்பறந்துள்ளது. குறைகளைப் பலமாக்கி, வறுமையையும் ஏளனத்தையும் வியர்வையால் கரைத்த இந்தவீரர்களுக்குத் தமிழக அரசு ஊக்கத் தொகை வழங்கி அங்கீகரித்துள்ளது.உடல் குறைகளைக் காரணம் காட்டிமுடங்கிப்போகிறவர்க ளுக்கு, இவர்களின் வாழ்க்கையே உன்னதமான பாடப்புத்தகம். ஒரு கதவை மூடினால், உழைப்பு ஆயிரம் கதவுகளைத் திறக்கும் என்பதற்கு நகோயா வானமே சாட்சி. தமிழ் மண்ணின் இந்த மைந்தர்களை நெஞ்சார வாழ்த்துவோம்!

மூவர்ணத்துடன் மிளிர்ந்தபதக்க மேடைஈட்டி எறிதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று இடங்களையும் இந்தியர்களே கைப்பற்றினர். பதக்க மேடை முழுவதும் மூவர்ணக்கொடியே அலங்கரித்த அந்தக்காட்சி, குறையை வென்ற இவர்களின் உறுதிக்குச் சான்றாகவும், இந்திய விளையாட்டுத் துறைக்குப் புதிய விடியலாகவும் திகழ்கிறது.

பொற்காலம்30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம்என மொத்தம் 114 பதக்கங்களை வாரிக்குவித்து, இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. 2023ஆம் ஆண்டுப் போட்டியில் 111 பதக்கங்களோடு ஐந்தாம் இடத்தில் நின்ற நாடு, இம்முறை ஒரு படி உயர்ந்துள்ளது. இது இந்தியப் பாரா விளையாட்டுவரலாற்றின் உண்மையான பொற்காலமே.-சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.