வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் தவிப்பு: புதிய அரசு ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ அமல்படுத்துமா?
30 May 2026, 9:13 pm

வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் தவிப்பு: புதிய அரசு ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை’ அமல்படுத்துமா?

கடந்த ஜனவரி மாதம் முதல் ஓய்வு பெற்ற அரசு ஊழி யர்கள் தங்களின் ஓய்வூதிய பலன்களைப் பெற முடியாமல் தவித்து வரும் சூழலில், புதிய அரசு இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் அல்லது பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள் ளது.

கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பழைய ஓய்வூதியம் மறுக்கப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு எதிராகப் பல்வேறு போராட் டங்கள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த 2026 ஜனவரி 3 அன்று அப்போ தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னால் ‘தமிழ்நாடு அரசின் உறுதிய ளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 2026 ஜனவரி 1 முதல் ஓய்வு பெறுப வர்கள், தங்களுக்கு விருப்பமானால் சிபிஎஸ் அல்லது உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள லாம் என்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் ஜனவரி 1-க்குப் பிறகு ஓய்வு பெற்ற பலரும் உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தையே விரும்புகின்றனர்.

ஆனால், இடையில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற கார ணத்தால், முந்தைய அரசால் அத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறை கள் மற்றும் அரசாணை வெளி யிடப்படவில்லை.

இதன் காரணமாக, கடந்த ஜனவரி முதல் தற்போது வரை ஓய்வு பெற்று வரும் ஊழி யர்கள் தங்களின் வாழ்வாதார நிலை என்னவென்று அறியாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, தற்போது பொறுப் பேற்றுள்ள தவெக அரசு, உடனடியாக இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அர சாணை பிறப்பிக்க வேண்டும் அல்லது 2003-க்கு முந்தைய பழைய ஓய்வூதியத் திட்டத்தையே முழுமை யாக அறிவித்து, தவிக்கும் ஓய்வூதி யர்களைக் கரை சேர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த அரசு ஊழி யர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. குடந்தை சரவணன்