தீக்கதிர் முக்கிய செய்திகள்
12 Jun 2026, 9:22 pm

சட்டமன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குமா? சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில்

சென்னை: ஜூன் 18 ஆம் தேதி கூடவிருக்கும் சட்ட மன்றக் கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப் படுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு சட்டப்பே ரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “சட்டசபைக்கு வந்து பாருங்கள்” என்று பதிலளித்தார்.

சென்னை செனாய் நகரில் தனியார் கால்பந்து அகா டமி நடத்திய உலகக் கோப்பை துவக்க விழாவில் நடிகர் தலைவாசல் விஜய், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆகி யோர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.

அப்போது, அதிமுகவில் இருந்து விலகிய 4 எம்.எல். ஏக்கள் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட போது, அவர்கள் மீது பேரவை விதிகளின்படி உரிய நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், பேரவைக்கு வெளியே நடக்கும் அரசியல் முடிவுகளுடன் தனக்கு சம்பந்தம் இல்லை என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடக் கோரிய வழக்கு அரசுகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஒன்றிய மற்றும் மாநில அரசு களுக்கு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. சென்னை யைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், பல தலைமுறைகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தமிழ்த்தாய் வாழ்த்து மரபை மீட்டெடுக்க தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்கள் பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் தமிழ்நாடு ஆளுநரை சேர்க்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கு 8 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பட்டா மனுக்களை 5 நாட்களுக்குள் பரிசீலிக்க அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: பொது மக்கள் பட்டா கோரி மனு அளித் தால் அந்த மனுக்களை 5 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதி காரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை எழிலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடைபெற்ற இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ரா.குமார் மற்றும் த.லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலையில் பட்டாக்கள் வழங்கும் பணியை துரிதப் படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நில உரிமை தொடர்பான கோரிக்கைகளுக்கு விரை வான தீர்வு வழங்கும் வகையில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதாகவும், பொது மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலையை தவிர்க்க அரசு முயற்சி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.