முந்தய பக்கம்

ஜூன் 18-இல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது!

5 Jun 2026, 1:46 pm
ஜூன் 18-இல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜூன் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் "வெற்றி தமிழகம்” என்ற பெயரில் 436 திட்டங்களை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜூன் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது; தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram