தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

1 மணி நேரம் 11 நிமிடங்களில் முடிந்த பேரவைக் கூட்டம்

18 Jun 2026, 10:30 pm
1 மணி நேரம் 11 நிமிடங்களில் முடிந்த பேரவைக் கூட்டம்

1 மணி நேரம் 11 நிமிடங்களில் முடிந்த பேரவைக் கூட்டம்

சென்னை, ஜூன் 18- தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேர வைக் கூட்டத்தொடர் வியாழக்கிழமை (ஜூன் 18) காலை 10 மணிக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக முத லமைச்சர் ஜோசப் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் காலை 9.30 மணி முதலே சட்டமன்ற வளாகத்திற்கு வரத் தொடங்கினர்.

எதிர்க்கட்சித் தலைவர் உதய நிதி ஸ்டாலின் காலை 9.55 மணிக்குச் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், தொடர்ந்து 9.57 மணிக்கு முத லமைச்சர் விஜய் அவைக்கு வருகை தந்து முன்வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர் களுக்கும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தார்.

முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர் காலை 9.52 மணிக்குத் தலைமைச் செயலக வளாகத்திற்கு வந்தார். அவரைச் சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் மற்றும் சட்டமன்றச் செயலாளர் சாந்தி ஆகியோர் முறைப்படி வரவேற்றனர். பின்னர் போலிஸ் இசைக்குழுவினர் இசை முழக்கத்துடன் ஆளுநரை வரவேற்ற தைத் தொடர்ந்து, காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

காலை 9.59 மணிக்குச் சட்டப்பேர வை அரங்கிற்குள் நுழைந்த ஆளு நர், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார். அவருக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் அமர்ந்தார். சரியாக காலை 10 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் ப்பட்டதுடன், அதன் தொடர்ச்சியாகத் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.

இதையடுத்து, ஆளுநர் அர்லேகர் தனது உரையைத் தமிழில் “வணக்கம்” என்று தொடங்கி ஆங்கில த்தில் வாசிக்க ஆரம்பித்தார். அத னைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தைச் சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் வாசித்து முடித்தார். பின்னர் மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய சட்டப்பேரவைக் கூட்டம் காலை 11.11 மணிக்கு நிறை வடைந்தது. இதன் மூலம் தொடக்க நாள் கூட்டம் மொத்தம் 1 மணி நேரம் 11 நிமிடங்கள் நடைபெற்றது.

கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஆளுநர் அர்லேகர், முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதய நிதி ஸ்டாலின், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்துப் பேரவை யிலிருந்து புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, ஆளுநர் அர்லேக ருக்குச் சபாநாயகர் ஜே.டி.சி. பிரபாகர் தேநீர் விருந்தளித்துக் கௌரவித் தார். பின்னர் தலைமைச் செயலகத்தி லிருந்து புறப்பட்ட ஆளுநர், கிண்டி யில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.