முந்தய பக்கம்

ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் இன்று கூடுகிறது!

17 Jun 2026, 9:10 pm
ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் இன்று கூடுகிறது!

ஆளுநர் உரையுடன் சட்டமன்றம் இன்று கூடுகிறது!

சென்னை, ஜூன் 17 - தமிழ்நாடு சட்டமன்றம் வியாழக்கிழமை கூடுகிறது. விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்தபின் நடைபெறும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் அர்லேகர் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. அதில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது, 2026-27 நிதிநிலை அறிக்கை தாக்கல் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு 17-ஆவது சட்டப்பேரவைக்கு 17 பேர் கொண்ட அலுவல் ஆய்வுக்குழுவை, சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்துள்ளார். இந்த ஆய்வுக்குழுவில், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், அமைச்சர்கள் என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ரா. நிர்மல் குமார் (தவெக), செ. ராஜேஷ் குமார் (காங்.), வன்னி அரசு (விசிக), அரசுத் தலைமைக் கொறடா ரா. சபரிநாதன் (தவெக), எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எ.வ. வேலு, எஸ்.எஸ். சிவசங்கர் (திமுக), எடப்பாடி கே. பழனிசாமி, ஓ.எஸ். மணியன் (அதிமுக), சவுமியா அன்புமணி (பாமக), ஆர். செல்லசுவாமி (சிபிஎம்), டி. இராமச்சந்திரன் (சிபிஐ), சையது பாரூக் பாஷா (முஸ்லிம் லீக்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram