தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்!பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!

10 Aug 2026, 8:33 pm
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்!பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்!பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை, ஆக. 10 -தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் கட்டாயம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் ஒட்டுமொத்த கட்சிகளின் ஆதரவோடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு, திங்களன்று (ஆக. 10) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் முன்மொழிந்தார்.

அரசினர் தீர்மானம்

“தமிழ், உலகின் தொன்மை வாய்ந்த செம்மொழியாகவும், தமிழர் நாகரிகம் உலகின் மிகப் பழமையான பண்பாட்டு மரபுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. மனோன்மணியம் சுந்தரனாரால் 1891-இல் எழுதப்பட்ட ‘மனோன்மணியம்’ என்ற நாடக நூலின் பாயிரத்திலிருந்து எடுக்கப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாடப்படவேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

2021 டிசம்பர் 12 முதல் மாநிலப் பாடலாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டு தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 2026 ஜூலை மாதம் ஒன்பதாம் தேதிய கடிதத்தில், மாநிலப் பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1970-களில் இருந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்” முதலில் பாடப்படுவது மரபுத்தன்மையாகவும், அரசாணைகளின் வாயிலாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது.ஆகவே, “தமிழ்த்தாய் வாழ்த்து” தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகும் என்பதை இப்பேரவை வலியுறுத்துகிறது.

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள மொழி மற்றும் பண்பாட்டு உரிமைகளின் அடிப்படையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஏகமனதாக தீர்மானிக்கிறது” என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தை முக்கிய எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர் கோவி. செழியன் வழிமொழிந்தும் வரவேற்றும் பேசினார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ராஜ்மோகன், விஸ்வநாதன், வன்னி அரசு, ஷாஜகான், சிபிஎம் சட்டமன்றக்குழு தலைவர் ஆர். செல்லசுவாமி, சிபிஐ உறுப்பினர் மாரிமுத்து, பாமக சார்பில் சிவக்குமார் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். இதையடுத்து, முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதை சட்டமாக்க வேண்டும் : சிபிஎம் வலியுறுத்தல்

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாக பாட வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது சிபிஎம் சட்டமன்றக்குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமிபேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் சம்பந்தமாக முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்கிறேன். சட்டமன்றத்தில் கொண்டு வரக்கூடிய தீர்மானங்கள் அத்தனையையும் ஒன்றிய அரசு முழுமையாக ஏற்பதில்லை. எனவே, நாம் தீர்மானத்துடன் நின்றுவிடாமல் இந்தக் கூட்டத் தொடரிலேயே சட்டமாக்க வேண்டும். மேலும் இதற்கான உத்தரவை விரைந்து பிறப்பித்து அனைத்து இடங்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.