தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம்

9 Aug 2026, 8:49 pm
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம்

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம்

சென்னை, ஆகஸ்ட் 9அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும்அரசினர் தனித் தீர்மானம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) நிறைவேற்றப்பட உள்ளது.நெல்லையில் நிகழ்ந்த சர்ச்சைதிருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் மாளிகை வழிகாட்டுதலின்படி முதலில் ‘வந்தே மாதரம்’, இரண்டாவதாக ‘தேசிய கீதம்’, மூன்றாவதாகவே ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ்மற்றும் நெல்லை தவெக எம்எல்ஏ முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியைப் புறக்கணித்தனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுநிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில்பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தில் புதியசட்டம் இயற்ற வேண்டும் என வலி யுறுத்தப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்தின் வரலாற்றுப் பின்னணி

மறைமலை அடிகளார் காலத்தைச் சேர்ந்த மனோன்மணீயம் சுந்தரனாரால் 1891-ஆம் ஆண்டு எழுதப்பட்ட“மனோன்மணீயம்” நாடக நூலின் பாயிரத்தி லிருந்து “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடல் எடுக்கப்பட்டது. கடந்த 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் இப்பாடல்முதலில் பாடப்பட வேண்டும் எனஅரசாணை வெளியிடப்பட்ட நிலையில், 2021 டிசம்பர் 12 முதல் இது தமிழ்நாட்டின் ‘மாநிலப் பாடல்’ என்ற அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது. இதன்படி கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவையில்இன்று தனித் தீர்மானம்

தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாகவும், தமிழ்நாட்டின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் நோக்கிலும்புதிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ளஅனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அலுவலகங்கள் மற்றும் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை முத

லமைச்சர் ஜோசப் விஜய் திங்களன்று (ஆக. 10) சட்டப்பேரவையில் கொண்டுவர உள்ளார். இதன் மீதான விவாதத்திற்குபிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.