உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ் ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம்!
3 Sept 2026, 11:54 pm

உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழ் ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம்!

சென்னை, செப். 3- சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தித் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத்தில் வியாழக்கிழமையன்று காலை கேள்வி நேரம் முடிந்ததும், இது தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்உரையாற்றினார்.

உயிரோடு, உணர்வோடு பிணைந்த மொழி: அப்போது பேசிய அவர், உலகின் தொன்மையான மொழியாக விளங்கும் தமிழ், உலகளவில் சுமார்9 கோடிப் பேராலும், இந்தியாவில் 8 கோடிப் பேராலும் பேசப்படுவதாகவும், அது வெறும் மொழி மட்டுமல்லாமல்,தமிழர்களின் உணர்வோடும் உயிரோடும் அடையாளத்தோடும் பிணைந்தது என்றும் குறிப்பிட்டார். ஆட்சி, கல்வி, தொழில்நுட்பம், அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழ் பயன்பாட்டில்இருப்பதாகவும், ஒன்றிய அரசு ஏற்கெனவே தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளதையும்நினைவூட்டினார்.

ஆங்கிலத்தையோ வேறெந்த மொழியையோ தாங்கள் நிராகரிக்கவில்லை என்றும், உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழியாக வேண்டும் என்பது அனைத்துத் தமிழர்களின் ஜனநாயகக் கோரிக்கை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அரசியலமைப்புச் சட்டம் வாய்ப்பை வழங்கியுள்ளது

கூட்டாட்சித் தத்துவத்தையும் பன்மொழிப் பண்பாட்டையும் அங்கீகரித்து, மாநிலங்கள் தங்களுடையஆட்சி மொழியைப் பயன்படுத்துவ தற்கான வாய்ப்புகளை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956-ன் பிரிவு 2, தமிழை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கிறது. அதே சட்டத்தின் பிரிவு 4-ஏ மற்றும் 4-பி ஆகியவை உரிமையியல், குற்றவியல் நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் தமிழைப் பயன்படுத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தையும் ஏற்கெனவே வழங்கியுள்ளன.

அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்து 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம் 1963-ன் பிரிவு 7 ஆகியவை, ஆளுநர்மற்றும் குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் மாநில மொழியைப்பயன்படுத்துவதற்கான வழிமுறையை வகுத்துள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 2006-ஆம் ஆண்டே தமிழகசட்டமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தது.எனினும், 2018-ஆம் ஆண்டு, ஒன்றிய சட்ட அமைச்சர் மாநிலங்களவையில் தெரிவித்தபடி, 2012-ஆம் ஆண்டே உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த முன்மொழிவை நிராகரித்திருந்தது.

கோரிக்கையின் அடிப்படை

தற்போது சட்டத் தமிழ் மொழிபெயர்ப்பு, டிஜிட்டல் நீதிமன்றங்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான மொழிபெயர்ப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகள் ஆகியவை மேம்பட்டிருப்பதால், பழைய முடிவை மறுபரிசீலனை செய்வது காலத்தின் தேவைஎன இத்தீர்மானம் கருதுகிறது.

தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக அங்கீகரிக்க

வும், தமிழில் மனுக்கள் தாக்கல் செய்வதற்கு வழிவகை செய்யவும், தீர்ப்புகள் தமிழில் வழங்கப்படும்கட்டமைப்பை உருவாக்கவும், நீதிபதிகள் மற்றும்வழக்கறிஞர்களுக்குச் சட்டத்தமிழ் பயிற்சியளிக்கவும் இத்தீர்மானம்வலியுறுத்துகிறது. இதற்கானஅனைத்துச் சட்ட நடவடிக்கைகளை யும் உடனடியாக மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசிடம் பேரவைகோருகிறது. இவ்வாறு முதலமைச்சர் விஜய் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

இதன் மீதான விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, பாமக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றுப் பேசினர். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றப்பட வேண்டும்!

தீர்மானத்தை வரவேற்று ஆர்.செல்லசுவாமி பேச்சுசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தும் தனித்தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்தார்.

இதன் மீது நடந்த விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி, “முதலமைச்சர் முன்மொழிந்த தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில், ஒரு சில விஷயங்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. குறிப்பாக, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் ‘மெட்ராஸ்’ நீதிமன்றம் என்பது ‘சென்னை’ உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்காக தமிழகத்தில் வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தமிழ் அறிஞர்கள் என பலரும் பலகட்ட போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், தற்போது முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் இந்த தீர்மானத்தில், சென்னை உயர் நீதிமன்றம் என்பதற்கு மாற்றாக ‘தமிழ்நாடு’ உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் இதற்கு ஆவன செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.