தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

18 Aug 2026, 9:36 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

முதல்வர் வரும்போது எழுந்து நிற்பது கட்டாயமில்லை – சபாநாயகர்

சென்னை: மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவையில்கண்ணியமாக நடந்துகொள்வது குறித்துப் பேசினார். இதற்குப் பதிலளித்த இந்து சமய அறநிலையத் துறைஅமைச்சர் ரமேஷ், முதல்வர் அவைக்கு வரும்போது எழுந்திராமல் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குக் கண்ணியத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.இதற்கு ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழ வேண்டுமெனில், எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது முதல்வர் எழுவாரா என எதிர்க்கேள்வி எழுப்பினார். பல உறுப்பினர்கள் கருத்து தெரிவித்த நிலையில், முதல்வர் வரும்போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை எனவும், அதை உறுப்பினர்களிடமே விட்டுவிடுவதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். இது தொடர்பான விதிகள் உறுப்பினர் கையேட்டில் இடம்பெற்றுள்ளன.

அரசியலுக்காகவே நீட் பயன்படுத்தப்படுகிறது – சி.வி.சண்முகம்

சென்னை: நீட்டை காங்கிரஸ் கொண்டுவந்ததாகவும், பாஜக அதைத் தொடர்வது ஏன் எனவும் அதிமுக உறுப்பினர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மாற்றிச் சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிய அவர், விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்களுக்கு ஜீவனாம்சம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற ராஜீவ் காந்தி அரசு சட்டம் இயற்றியதை முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.மாணவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் நீட் கட்டாயத் தீர்ப்பையும் இதேபோல் மாற்றியிருக்கலாம் எனவும், அரசியல் செய்வதற்காகவே நீட் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 2013இல் நீட் தீர்ப்பு வழங்கப்பட்டபோதே காங்கிரஸ் அதைத் தடுத்திருக்கலாம் என அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் விமர்சித்தார்.

தேவையற்றதைப் பேச அனுமதிக்க மாட்டேன்! அமைச்சர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

சென்னை: கர்நாடக வனத்துறை அதிகாரிகளால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தனர்.பதிலளித்த சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார், 2009 உண்ணாவிரதப் போராட்டம் குறித்துத் தெரிவித்த கருத்துக்குத் திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சிறு குழப்பம் ஏற்பட்டது. தேவையற்ற கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அமைச்சர்கள் பதிலுரைக்கும்போது பேசப்படும் பொருளை ஒட்டியே பேச வேண்டும் எனவும், தேவையற்றதைப் பேச இனி அனுமதிக்க மாட்டேன் எனவும் அவர் எச்சரித்தார்.

தென்காசி விளையாட்டு மைதானம் கேரள எல்லையில்?

சென்னை: குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்பட்டால் தமிழக வீரர்கள் ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும் என திமுக உறுப்பினர் மெய்யநாதன் கோரினார்.பதிலளித்த சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ், கடந்த ஆண்டு ரூ.15 கோடியில் தென்காசியில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விளையாட்டு மைதானம், 25 கி.மீ. தள்ளிமக்கள் வசிப்பே இல்லாத கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளதாகவும், அங்கு இரண்டே பேருந்துகள் மட்டுமேஇயக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மைதானம் கேரள எல்லையில் அல்ல, தென்காசிக்கு உட்பட்ட பகுதியில்தான் அமைந்துள்ளது என திமுக உறுப்பினர் கலை கதிரவன் மறுத்தார்.

3 ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு

சென்னை: அரசுப் பெண் பணியாளர்களின் மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என மனிதவள மேலாண்மைத் துறை சார்பில்அறிவிக்கப்பட்டது. ‘எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ் அரசு சேவைகள் இணைய வழியில் எளிமைப்படுத்தப்படும்; நடப்பு நிதியாண்டில் 150 சேவைகள் இணையவழிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

2036 ஒலிம்பிக் இலக்கு; 10 சிறப்பு விளையாட்டு மையங்கள்

சென்னை, ஆக.18-2036 ஒலிம்பிக்கை இலக்காகக் கொண்டு, 8 முதல் 18 வயது வரையிலான திறமையான மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு எதிர்கால சாம்பியன்களாக உருவாக்கப்படுவர் என இளைஞர் நலன்–விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.ரூ.15 கோடியில் விளையாட்டு விடுதிகள் நவீனமயமாக்கப்படும்; பதக்கங்களை இலக்காகக் கொண்டு 10 ஒலிம்பிக்சிறப்பு விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் பழங்குடியினர் மையம்,நாகப்பட்டினத்தில் கடற்கரை விளையாட்டு மையம், செங்கல்பட்டில் இறகுப்பந்து–மேசைப்பந்து மையம்உள்ளிட்டவை அமைக்கப்படும். சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, கொடைக்கானல், சேலம், திருச்சி ஆகிய இடங்களிலும் மையங்கள் உருவாக்கப்படும்.சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் சர்வதேச தரப் பல்தள விளையாட்டு வளாகமும், ‘ஒலிம்பிக் இல்லமும்’ உருவாக்கப்படும். கோயம்புத்தூரில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) பயிற்சி அகாடமியும் அமைக்கப்படும்.

நீட் எதிர்ப்பு மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக ஆக.25 அன்று திருநெல்வேலியில் நடத்தத் திட்டமிடப்பட்ட மாநாட்டுக்குக் காவல்துறை அனுமதி மறுத்தது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி, பதிலளிக்க உத்தரவிட்டது.

நீட்டை ரத்து செய்யக் கோரியும், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இடஒதுக்கீட்டை எதிர்த்தும் திராவிடர் கழகம் நடத்த உள்ள இருசக்கர வாகனப் பயணத்துக்கும் மாநாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மனுத் தாக்கல் செய்தார்.மாநாட்டுப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், வேறு இடத்தில் கோரினால் பரிசீலிக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்தது.“நீட் என்றாலே ஏன் தடை? மாநாடு நடத்த அனுமதி வழங்குவதில் என்ன சிக்கல்?” என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கேள்வி எழுப்பி, விசாரணையைப் புதன்கிழமைக்கு (ஆக.19) ஒத்திவைத்தார்.

விவசாயிகள் பெயரில் மண் அள்ளும் மாபியாக்களை விடமாட்டோம்!

அமைச்சர் பிரபு எச்சரிக்கைசென்னை: வண்டல் மண்ணை விவசாயிகள் எடுக்க முறையாக அனுமதி வழங்க வேண்டும் என அதிமுக உறுப்பினர் மணி கோரினார். இதற்குப் பதிலளித்த கனிமவளத் துறை அமைச்சர் பிரபு, விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கப்படுகிறது எனவும், விவசாயிகள் பெயரில் அதிகமாக மண் அள்ளும் மாபியாக்களை விடமாட்டோம் எனவும் தெரிவித்தார்.வண்டல் மண் விவசாயிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்பதே முதலமைச்சரின் உத்தரவு எனக் கூறிய அவர், திருடிச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றார். விவசாயிகளை மாபியா எனக் கூறியது தவறு என எடப்பாடி பழனிசாமி கண்டித்தபோது, விவசாயிகள் என்ற போர்வையில் செயல்படுபவர்களையே மாபியா எனக் குறிப்பிட்டதாக அமைச்சர் விளக்கினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.