முந்தய பக்கம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை

31 Mar 2026, 4:50 pm
 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்  திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை
<p><strong>&nbsp;தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்&nbsp;&nbsp;திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை</strong></p> <p>சென்னை, மார்ச் 31- சென்னை கிழக்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி களின் மாவட்டத் தலைவர்கள், செய லாளர்கள், வேட்பாளர்கள், தொகுதி பார்வை யாளர்கள் மற்றும் பகுதி செயலாளர்க ளுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வா யன்று (மார்ச் 31) &nbsp;நடைபெற்றது. &nbsp;திமுக சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான &nbsp;பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வடசென்னை நாடாளு மன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீரா சாமி, சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் எம்.ராமகிருஷ்ணன் (வடசென்னை) ஜி.செல்வா (மத்திய சென்னை) வில்லி வாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக்மோகன், அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் பூர்ணிமா, மேயர் பிரியா, உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் களப்பணிகளைத் தீவிரப்படுத்துவது குறித்தும் இந்த நிகழ்வில் ஆலோசிக்கப் பட்டன.</p>
Share
FacebookXWhatsAppTelegram