தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 4,097 வேட்பாளர்கள் போட்டி!
10 Apr 2026, 7:03 pm
<p>தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளில் 4,097 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><p>தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில், ஆண் வேட்பாளர்கள் 6216 பேர், பெண் வேட்பாளர்கள் 1,380 பேர், மாற்று பாலின வேட்பாளர்கள் 3 பேர் என மொத்தம் 7,599 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2,460 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 521 பேர் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்தலில் 234 தொகுதிகளில் 4,097 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p><p><br></p>
