தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்திற்கு வேண்டாமா மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம்? - மோசஸ் பிரபு

22 Aug 2026, 8:20 pm
தமிழகத்திற்கு வேண்டாமா மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம்? - மோசஸ் பிரபு

தமிழகத்திற்கு வேண்டாமா மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம்? - மோசஸ் பிரபு

அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனையின் அடையாளமாகத் திகழ்ந்த டாக்டர் நரேந்திர தபோல்கர் மதவெறி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆகஸ்ட் 20 ஆம் தேதி, நாடு முழுவதும் மக்கள் அறிவியல் இயக்கங்களால் தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்போக்கு இயக்கங்களால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சட்டத்தின் எல்லைகள் மற்றும் தேவைகள்

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் அமலான மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டமானது, கோயிலுக்குச் செல்வது, பிரார்த்தனை செய்வது, விரதம் போன்ற பொதுவான மதச் சடங்குகளையோ அல்லது ஜோதிடம் மற்றும் வாஸ்து ஆலோசனைகளையோ தடை செய்யவில்லை. மாறாக, மனிதர்களின் உடல், மனம் மற்றும் பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும், ஏமாற்றும் அல்லது மனித மாண்புகளைப் பாதிக்கும் குறிப்பிட்ட நடைமுறைகளையே இச்சட்டம் குற்றமாக வரையறுக்கிறது.

பேய் ஓட்டுதல் என்ற பெயரில் உடல் சித்திரவதை செய்தல், புதையலுக்காக மாந்திரீகச் சடங்கு செய்து தாக்குதல் நடத்துவது, தன்னை தெய்வம் என்று கூறி ஏமாற்றுவது மற்றும் உடலுக்குக் காயம் ஏற்படுத்தும் சடங்குகளைத் தூண்டுவது போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களைத் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் நிலவும் கள யதார்த்தம்

தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தொடர்பான நிகழ்வுகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. உதாரணமாக:

கடந்த ஆண்டு மதுரையைச் சேர்ந்த 26 வயதுப் பெண் பிரியா, குழந்தை பிறந்து 40 நாட்களுக்குப் பிறகு கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, தெய்வ ஆவி வந்ததாகக் கூறி உறவினர் தலையில் தாக்கியதால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலை அருகிலுள்ள கிராமத்தில் ஜீவசமாதியில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வாயால் மண் சோறு சாப்பிடும் சடங்குகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது.

அரசின் செயல்பாடுகளும் விவாதங்களும்

கடந்த 2025 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கைகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, ஒருவரின் நம்பிக்கை மற்றொருவருக்கு மூடநம்பிக்கையாகத் தோன்றலாம் என்ற சிக்கல் சுட்டிக்காட்டப்பட்டது. தற்போதுள்ள அரசாங்கத்திலும் அமைச்சர்களின் தனிப்பட்ட மத அடையாளங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் பொதுவெளியில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

அறிவியல் இயக்கங்களின் நிலைப்பாடு

ஒவ்வொரு மத நடைமுறையையும் மூடநம்பிக்கை என்று அரசு தடை செய்ய வேண்டும் என்று அறிவியல் இயக்கம் கோரவில்லை. மாறாக, மக்களை ஏமாற்றுதல், உயிரிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் ஆபத்தான சடங்குகளைச் செய்யும் செயல்கள் மட்டுமே தடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

அறிவியல் மற்றும் பகுத்தறிவு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, மக்களைப் பாதிக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும். மூடநம்பிக்கைகளால் எழும் இன்னல்களைத் தடுத்து, பொதுமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பான வாழ்வையும் உறுதி செய்ய இச்சட்டம் காலத்தின் கட்டாயமாகிறது.

சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள் மக்களைப் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கின்றன. போலி சாமியார்கள் மற்றும் மாந்திரீகர்களின் செயல்களால் எளிய மக்கள் ஏமாற்றப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 51(h-A)-ன் படி அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும். இந்த ஜனநாயகக் கடமையை உணர்ந்து, அரசு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, இத்தகைய தீய பழக்கவழக்கங்களைச் சட்டத்தின் மூலம் உறுதியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.