சென்னை, நவ. 21 -குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7ஆயி ரத்து 850 வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி
32 minutes before

சென்னை, நவ. 21 -குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7ஆயி ரத்து 850 வழங்க வேண்டுமென்று தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி

ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாவட்ட பேரவை வலியுறுத்தி உள்ளது.

சங்கத்தின சென்னை மாவட்ட முதல் பேரவை சனிக்கிழமையன்று (நவ.21) திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இந்தப்பேரவையில், அரசு பணிக்கு மாற்றப்பட்டு ஊர்நல அலுவலர், மேற்பார்வையாளர் நிலை-2. ஆசிரியர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 2026 பிப்ரவரி மாத அரசாணைப்படி உயர்த்தப்பட்ட சிறப்பு ஓய்வூதியத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும்,

அகவிலைப்படி உயர்வு, பண்டிகை முன்பணம் ஆகியவற்றை வழங்குவதோடு, ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி தர வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2026-ல் ஓய்வூதியர்களை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவர் கி.தங்கம் தலை மையில் நடைபெற்ற இந்தப்பேரவையில், மாநில துணைத்தலைவர் பி.சித்ரசெல்வி தொடக்கவுரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் பி.ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். தோழமைச் சங்கத் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.

மாவட்டத் தலைவராக கி.தங்கம், செயலாளராக பா.ஞானசௌந்தரி, பொரு ளாளராக என்.நிரஞ்சனா தேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.