மூடப்பட்ட 717 மதுக் கடைகளின் பட்டியல் வெளியீடு
15 Jun 2026, 10:32 pm

மூடப்பட்ட 717 மதுக் கடைகளின் பட்டியல் வெளியீடு

சென்னை, ஜூன் 15 - தமிழ்நாட்டில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் மாவட்டவாரியான விவரங் களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. மாதம் ரூ. 4,000 கோடி அளவில் மது விற்பனை நடைபெறுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் மது விற்பனை மூலம் ரூ. 48,344 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால் மதுவால் குடும்பங்கள் சீரழிவதை தொடர்ந்து சுட்டிக்காட்டி பூரண மதுவிலக்கு கோரிக்கை நீடித்து வருகிறது.

முதலமைச்சர் விஜய் பதவியேற்றவுடன் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த 65 சிறப்புப் படைகள் அமைக்கப்படும் என ஆணை பிறப்பித்தார். அதன் தொடர்ச்சி யாக வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களின் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் உள்ள 255 கடைகள் என மொத்தம் 717 கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட உத்தரவிட்டிருந்தார். மூடப்பட்ட கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் வேறு கடைகளுக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது மாவட்ட வாரியாக மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை வடக்கு 13, சென்னை மத்தியம் 9, சென்னை தெற்கு 9, காஞ்சிபுரம் வடக்கு 10, காஞ்சிபுரம் தெற்கு 8, திருவள்ளூர் கிழக்கு 27, திருவள்ளூர் மேற்கு 6, கோயம்புத்தூர் வடக்கு 48, கோயம்புத்தூர் தெற்கு 23, கரூர் 8, ஈரோடு 42, திருப்பூர் 31, நீலகிரி 27, அரக்கோணம் 7, தருமபுரி 7, கிருஷ்ணகிரி 7. நாமக்கல் 14, சேலம் 22, திருவண்ணா மலை 19, வேலூர் 6, கடலூர் 21, நாகப்ப ட்டினம் 4, புதுக்கோட்டை 17, பெரம்பலூர் 6, தஞ்சாவூர் 6, திருச்சிராப்பள்ளி 15, திருவாரூர் 6, விழுப்புரம் 9, திண்டுக்கல் 26, கன்னியாகுமரி 15, இராமநாதபுரம் 29, தேனி 12, திருநெல்வேலி 33, தூத்துக்குடி 63, மதுரை தெற்கு 39, மதுரை வடக்கு 13, விருதுநகர் 42, சிவகங்கை 18.

மண்டல வாரியாக, சென்னை மண்ட லம் 82, கோயம்புத்தூர் மண்டலம் 179, சேலம் மண்டலம் 82, திருச்சி மண்டலம் 84, மதுரை மண்டலம் 290 என மொத்தம் 717 கடைகள் மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.