மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
29 May 2026, 9:53 pm

மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

சென்னை, மே 29 - தேனி, தர்மபுரி, வேலூர், திரு நெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களின் ஆட்சி யர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

முன்னாள் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் ஆர். வைத்தியநாதன் தேனி மாவட்ட ஆட்சியராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியர் வி. சரவணன் தர்மபுரி மாவட்ட ஆட்சியராகவும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும், நிதித் துறை இணைச் செயலாளர் பிரதீக் தயாள் திருச்சி மாவட்ட ஆட்சிய ராகவும் பொறுப்பேற்கின்றனர்.

விடுப்பிலிருந்து திரும்பிய வந்தனா கார்க் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் ஜே.இ. பத்மஜா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சிய ராகவும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை நிர்வாக இயக்குநர் என்.பிரியா ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராகவும், திருச்சி மாநக ராட்சி ஆணையர் எல். மதுபாலன் நாமக்கல் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்கு நர் ஆனந்த் மோகன் திருநெல் வேலி மாவட்ட ஆட்சியராகவும் , சென்னை நதிகள் சீரமைப்பு அறக் கட்டளை உறுப்பினர் செயலாளர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், கூட்டு றவு சங்கங்களின் கூடுதல் பதி வாளர் டாக்டர் எம்.வீரப்பன் செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியராகவும் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

உயர்கல்வித்துறை துணைச் செயலாளர் ஆர். ரேவதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும், நாகப் பட்டினம் மாவட்ட ஆட்சியர் பி. ஆகாஷ் மதுரை மாவட்ட ஆட்சி யராகவும், மதுரை மாவட்ட ஆட்சி யர் கே.ஜே. பிரவீன் குமார் நாகப் பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும் பரஸ்பரம் மாற்றப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் நிதித்துறை இணைச் செயலாளராகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் நிதித்துறை இணைச் செயலாளராகவும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யர் ஆர். அழகுமீனா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணைச் செயலாளராகவும், தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா பேரூராட்சி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல பல்வேறு துறை களில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.