தமிழகத்தில் 95.02% மாணவர்கள் தேர்ச்சி
9 May 2026, 12:24 am

தமிழகத்தில் 95.02% மாணவர்கள் தேர்ச்சி

சென்னை, மே 8 - ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான திருப்புமுனையாக விளங்கும் 12- ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக் கிழமை காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்பட்டன.

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சந்திர மோகன் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித் தார்.

2025–2026 கல்வியாண்டுக்கான 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26 வரை நடைபெற்றது. மொத்தம் 7 லட்சத்து 91 ஆயி ரத்து 654 மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித் திருந்தனர்.

இதில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 654 மாணவி யரும், 3 லட்சத்து 72 ஆயிரத்து 930 மாணவர்களும் அடங்குவர். குறிப்பிடத்தக்க வகையில், 7,874 மாணவர்கள் தேர்வு எழுதவே வரவில்லை.

மாணவியர் 3.81% கூடுதல் தேர்ச்சி இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று வெளி யான தேர்வு முடிவுகளில், 7 லட்சத்து 53 ஆயிரத்து 694 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95.20 சதவிகித மாக உள்ளது.

இது கடந்த ஆண்டின் தேர்ச்சி விகித மான 95.03 சதவிகிதத்தை விட 0.17 சதவிகிதம் அதிகமாகும். தேர்வெழுதிய மாணவியரில் 97 சத விகிதம் பேரும், மாணவர்களில் 93.19 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் இந்த முறையும் மாணவர்களை விட, மாணவியரே 3.81 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூர் மாவட்ட தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி 600-க்கு 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

489 அரசுப் பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 536 மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெற்றது. இவற்றுள் 2 ஆயிரத்து 639 பள்ளிகள் 100 சத விகிதத் தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்து உள்ளன.

5 ஆயிரத்து 170 பள்ளிகள் 95 சத விகிதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் மட்டும் 489 பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்க சாதனையாகும்.

மேலும் 1,572 அரசு மேல் நிலைப் பள்ளிகள் 95 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன.

பள்ளி வகை வாரியான தேர்ச்சி அரசுப் பள்ளிகள் 92.16 சதவிகிதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14 சதவிகிதமும், தனி யார் சுயநிதிப் பள்ளிகள் 98.72 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

இருபாலரும் படிக்கும் பள்ளிகளில் 95.03 சதவிகிதமும், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் 97.08 சதவிகிதமும், ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் 90.49 சதவிகித மும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 6.59 சதவிகிதம் கூடுத லாக தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கணினி அறிவியலில் 99.84 சதவிகிதம் தேர்ச்சி அதிகபட்சமாக கணினி அறிவியலில் 99.84 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

உயிரியலில் 99.49 சதவிகிதம், கணிதத்தில் 99.12 சதவிகிதம், இயற்பியலில் 98.87 சதவிகிதம், வேதியியலில் 98.82 சதவிகிதம், விலங்கியலில் 98.69 சதவிகிதம், தாவரவியலில் 98.62 சதவிகிதம், கணக்குப் பதிவியலில் 98.04 சதவிகிதம், வரலாற்றில் 97.90 சதவிகிதம், வணிகவியலில் 97.55 சதவிகி தம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி விகிதம் அறிவியல் பாடப் பிரிவில் 96.90 சதவிகிதம், வணிகவியல் பாடப் பிரிவில் 92.67 சதவிகிதம், தொழிற்பாடப் பிரிவில் 85.97 சதவிகிதம், கலைப் பிரிவில் 55.19 சதவிகிதம் என மாணவ - மாணவி யர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கணினி அறிவியலில் 6,945 பேர் சதம் கணினி அறிவியலில் 6,945 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கணினி பயன்பாடுகளில் 2,099 பேரும், கணக்குப் பதிவியலில் 1,946 பேரும், கணி தத்தில் 732 பேரும், உயிரியலில் 784 பேரும், வேதியியலில் 632 பேரும், வணிகவியலில் 683 பேரும் நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தமிழில் 83 பேர், ஆங்கிலத்தில் 21 பேர், இயற்பி யலில் 15 பேர், தாவரவியலில் 31 பேர், விலங்கிய லில் 18 பேர் என மாணவ - மாணவியர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

16 ஆயிரத்து 024 மாணவர்கள், குறைந்தது ஒரு பாடத்திலாவது நூற்றுக்கு நூறு மதிப்பெண் களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இவற்றுள் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 695 ஆகும். மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் ஈரோடு மாவட்ட மாணவ - மாணவியர் 98.87 சதவிகித தேர்ச்சியுடன் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளனர்.

இதேபோல சிவ கங்கை மாவட்ட மாணவ - மாணவியர் 98.05 சத விகித தேர்ச்சியுடன் இரண்டாமிடத்தையும், கன்னி யாகுமரி மாவட்ட மாணவ - மாணவியர் 97.63 சத விகித தேர்ச்சியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்து உள்ளனர்.

திருநெல்வேலி (97.54 சதவிகிதம்), திருச்சிராப்பள்ளி (97 சதவிகிதம்) மாவட்ட மாணவ - மாணவியர் அடுத்தடுத்த இடங்களைப் பெற்று உள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் ஈரோடு மாவட்ட மாணவ - மாணவியர் 98.24 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளனர்.

சிவ கங்கை 96.97 சதவிகிதத்துடன் இரண்டாமி டத்தையும், திருச்சிராப்பள்ளி 96.50 சதவிகிதத்து டன் மூன்றாமிடத்தையும், தென்காசி 96.15 சதவி கிதத்துடன் நான்காமிடத்தையும், கன்னியாகுமரி 96.12 சதவிகிதத்துடன் ஐந்தாமிடத்தையும் பிடித்து உள்ளன.