தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்தாம் வகுப்பில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி! புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்; மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி

20 May 2026, 11:09 pm
பத்தாம் வகுப்பில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி! புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்; மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி

பத்தாம் வகுப்பில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி! புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்; மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி

சென்னை, மே 20- தமிழ்நாட்டில் 2025- 2026ஆம் கல்வியாண்டுக் கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமையன்று வெளி யான நிலையில், 94.31 சத விகித மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட கூடுதல் தேர்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, மொத்தம் 8 லட்சத்து 70 ஆயிரத்து 643 மாணவ - மாணவியர் எழுதி யிருந்த நிலையில், அவர் களில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 105 பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர்.

கடந்த ஆண்டின் (2025) தேர்ச்சி 93.80 சதவிகிதம் என்ற நிலையில், இந்தாண்டு தேர்ச்சி 0.51சதவிகிதம் உயர்ந்துள்ளது.

மாணவியரைப் பொறுத்தவரை, 4 லட்சத்து 35 ஆயிரத்து 247 பேர் தேர்வெழுதிய நிலையில், அவர்களில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 891 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.47 சதவிகிதமாகும்.

மாண வர்கள் 4 லட்சத்து 35 ஆயி ரத்து 396 பேர் தேர்வெழுதி யிருந்த நிலையில், 4 லட்சத்து ஒரு ஆயிரத்து 214 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.15 சதவிகிதம் தேர்ச்சி விகித மாகும். மாணவர்களை விட, மாணவியர் 4.32 சதவிகி தம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11 ஆயிரம் 174 மாணவ - மாணவியர், விண்ணப்பித்திருந்தும் தேர் வில் கலந்துகொள்ளவில்லை.

நூற்றுக்கு நூறு மதிப்பெண் சாதனை பாடவாரியாக தமிழில் 34 மாணவர்களும், ஆங்கி லத்தில் 92 மாணவர்களும், கணிதத்தில் 3,194 மாணவர் களும், அறிவியலில் 10 ஆயி ரத்து 476 மாணவர்களும், சமூக அறிவியலில் 3,336 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

புதுக்கோட்டை,சிவகங்கை, தஞ்சாவூர் சாதனை ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் 97.57 சதவிகி தத்துடன் முதலிடம் பிடித்துள் ளது.

சிவகங்கை மாவட்டம் 97.54 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் 97.41 சதவிகிதத்துடன் மூன்றா வது இடத்தையும் பிடித்து ள்ளன.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 97.31 சதவிகித தேர்ச்சி விகிதத்துடன் நான்காவது இடத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் 97.30 சதவிகிதத் தேர்ச்சி யுடன் ஐந்தாவது இடத்திலும் வந்துள்ளன.

அரசுப் பள்ளிகளில் சிவகங்கை முன்னிலை அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாநில அளவில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் அதிகபட்சமாக 97.42 சதவிகிதத் தேர்ச்சி விகி தத்துடன் முதலிடம் வகிக் கிறது.

தொடர்ந்து புதுக் கோட்டை மாவட்டம் 97.09 சதவிகிதத் தேர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டம் 96.89 சதவிகிதத்துடன் மூன்றா வது இடத்தையும், இராம நாதபுரம் மாவட்டம் 96.78 சதவிகிதத்துடன் நான்கா வது இடத்தையும், திருச்சி ராப்பள்ளி மாவட்டம் 96.48 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

வகை வாரியாக தேர்ச்சி விகிதம் ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.86 சத விகிதமாக உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.34 சதவிகிதமும், தனியார் பள்ளிகள் 98.14 சதவிகித மும் தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. பள்ளி முறைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, பெண்கள் பள்ளிகள் 96.42 சதவிகித மும், இருபாலர் பள்ளிகள் 94.42 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.

ஆண்கள் பள்ளிகள் 88.50 சதவிகிதத் தேர்ச்சி விகிதத்துடன் பின்த ங்கியுள்ளன. பெண்கள் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளைவிட 7.92 சதவிகி தம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

5,171 பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி இந்தாண்டு 12 ஆயி ரத்து 467 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வெழுதி னர்.

இவற்றில் 5 ஆயிரத்து 171 பள்ளிகள் 100 சதவிகி தம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதில், 1,931 அரசுப் பள்ளி கள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து ள்ளன.

அதேபோல, 8 ஆயி ரத்து 233 பள்ளிகள் 95 சத விகிதத்திற்கும் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ள நிலை யில், இவற்றிலும் 3 ஆயி ரத்து 463 அரசுப் பள்ளிகள் 95 சதவிகிதத்திற்கும் மேலான தேர்ச்சியை எட்டியுள்ளன.

சிறைவாசிகள் - சிறப்பு வகை மாணவர்களின் தேர்ச்சி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 370 சிறை வாசிகளில் 354 பேர் (95.68 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள் ளனர்.

அதேபோல, மாற்றுத் திறனாளி மாணவர்கள் 13 ஆயிரத்து 292 பேர் தேர்வெழுதியிருந்த நிலையில், அவர்களில் 11 ஆயிரத்து 416 பேர் (85.89 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தனித் தேர்வர்கள் 24 ஆயிரத்து 353 பேர்களில் 8 ஆயிரத்து 744 பேர் (35.91 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.