தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

10-ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகளை முந்திய பழங்குடியினர் நலப் பள்ளிகள்

23 May 2026, 12:56 am
10-ஆம் வகுப்பு தேர்வு   தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகளை  முந்திய பழங்குடியினர் நலப் பள்ளிகள்
<p><strong>10-ஆம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகளை முந்திய பழங்குடியினர் நலப் பள்ளிகள் </strong></p><p>சென்னை,மே 22- தமிழக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர் வில், பழங்குடியினர் நலத்துறைப் பள்ளி கள் 96.7 சதவீத தேர்ச்சி பெற்று, அரசு மற்றும் பிற நலத்துறைப் பள்ளிகளை விடச் சிறந்த சாதனை படைத்துள்ளன. இத்தேர்வில் தேர்வு எழுதிய 2,245 மாண வர்களில் 2,170 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிக மாகும். மொத்தம் உள்ள 67 பள்ளிகளில் 44 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள் ளன. பெரும்பாலான மாணவர்கள் தங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி களாக மாறவுள்ளதாகவும், மாணவர்களின் கல்வி, உணவு, போக்குவரத்து முதல் கல்லூரி விண்ணப்பக் கட்டணம் வரை அனைத்தையும் துறையே ஏற்பதாகவும் சேலம் கருமந்துறை பள்ளி தலைமை ஆசிரியர் டி. விஜயன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு, கடந்த ஆண்டை விட ஐந்து மடங்கு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டதாகத் துறையின் இயக்குநர் எஸ்.அண்ணாதுரை கூறினார். மாநிலம் முழு வதும் உள்ள 1,500 ஆசிரியர்களின் அர்ப் பணிப்பே இதற்குப் பலன் தந்துள்ளது. இதே போல் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் இப்பள்ளிகள் 97 சதவீத தேர்ச்சி பெற்றுள் ளன. கடந்த ஆண்டு ஏ. ராஜேஸ்வரி என்ற மாணவி ஐஐடி-யில் சேர்ந்து சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு 500 மாணவர்களை நாட்டின் முன்னணி கல்லூரி களில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.