முந்தய பக்கம்

நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை விட தமிழக உற்பத்தி 3 மடங்கு அதிகம்

12 Feb 2026, 3:51 pm
நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை விட  தமிழக உற்பத்தி 3 மடங்கு அதிகம்
<p><strong>நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை விட &nbsp;தமிழக உற்பத்தி 3 மடங்கு அதிகம்</strong></p> <p>முதலமைச்சர் பெருமிதம் சென்னை, பிப்.12 - இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட் டின் உற்பத்தி வளர்ச்சி மூன்று &nbsp;மடங்கு அதிகம் என்று முதல மைச்சர் தெரிவித்தார். சென்னை கிண்டியில் வியாழக் கிழமை (பிப்.12) நடைபெற்ற செயலாக்க மாநாட்டில் 74,267 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தொடங்கி வைத்தார். &nbsp;மேலும், 71 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற &nbsp;52 திட்டங்களையும் திறந்து வைத்தார். டாபர், மகேந்திரா ஆராய்ச்சி மையம், பிரிட்டானியா, &nbsp;லூலூ குரூப், டாடா கெமிக் கல்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவ னங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த மாநாட்டில் உரை யாற்றிய முதலமைச்சர், &ldquo;இந்தியா வின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ கத்தின் பங்கு மட்டும் 41 சதவீதமாக உள்ளது. &nbsp;கடந்த ஆண்டு இந்தி யாவின் உற்பத்தி திறன் 4.5 சதவீதமாக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 14.7 சத வீதமாக உள்ளது. இந்தியாவின் உற்பத்தி &nbsp;வளர்ச்சியை விட தமிழகத்தின் உற் பத்தி வளர்ச்சி மூன்று மடங்கு அதிகம். &nbsp;2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவது என்ற இலக்கு இருப்பதாகவும், தொழில்துறையில் செய்த சாத னைகளை அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் நாங்களே முறி யடிப்போம்&rdquo; என்று உறுதியாக கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram