தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

22 Nov 2025, 4:09 pm
தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

சென்னை, நவ.22- புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமா னார். அவருக்கு வயது 92. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை பூர்வீக மாகக் கொண்டவரான தமி ழன்பன், செ.இரா. நடராசன் -  வள்ளியம்மாள் தம்பதியரின் ஒன்பது குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர். ந. ஜெகதீசன் என்ற இயற்  பெயரைக் கொண்ட தமி ழன்பன், கவிதை, புதினம், நாடகம், பாடல்கள், திற னாய்வு மற்றும் வாழ்க்கை  வரலாறு என ஏராளமான படைப்புகளை வழங்கிய வர். இவரது படைப்புகள் இந்தி உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளிலும், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பன்  னாட்டு மொழிகளிலும் பரந்து பட்ட வாசகர் தளத்தை பெற்ற னவாகும். ‘வணக்கம் வள் ளுவ’ படைப்பு, சாகித்ய அகாதெமி விருது பெற்ற சிறப்புக்குரியது. தனது இரண்டு மகன் களில் ஒருவருக்கு பாப்லோ நெருடா, மற்றவருக்கு பாரதிதாசன் என்று பெயர் சூட்டினார்.

முற்போக்கு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: பாவேந்தர் பாரதிதாசன் கவிமரபைச் சேர்ந்த முற் போக்கு கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலியை தெரி வித்துக்கொள்கிறோம். மரபுக்கவிதை, ஹைக்கூ என கவிதையின் அனைத்து  வடிவங்களிலும் மிளிர்ந்தவர். இவருடைய கவியரங்க கவிதைகளில் அர்த்தச் செறிவுடன் அனல் தெறிக்கும். பொதுவுடமைக் கருத்துக்களை தனது கவிதைகளில் பரப்பிய அவர், ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும், சாதி, மத வெறி, மூடநம்பிக்கை சிந்தனைகளைச் சாடுபவராகவும் விளங்கினார். ‘வணக்கம் வள்ளுவ’ கவிதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சிலி நாட்டுப் புரட்சிக்  கவிஞர் பாப்லோ நெருடா மீது பெரும்பற்று கொண்ட கவி ஞர் ஈரோடு தமிழன்பன், தனது கவிதைகளில் சமரசமற்ற ஏகாதிபத்திய உணர்வை வெளிப்படுத்தியவர். அவரு டைய மறைவு முற்போக்கு கலை, இலக்கிய உலகிற்கு பேரிழப்பு. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்  வதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.