விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
27 minutes before

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி காய்கறி கூடைகள், காலி பாத்திரங்கள் ஏந்தியும், கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியும் ஞாயிறன்று (நவ.15) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் வாலிபர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென் சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், செயலாளர் தீ.சந்துரு, மாவட்டக் குழு உறுப்பினர் நிரஞ்சனா, பகுதிகுழு உறுப்பினர் ஜெயசீலி ஆகியோர் பேசினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துறைமுகம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பகுதி பொருளாளர் சிபி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்தியசென்னை மாவட்ட பொருளாளர் லோ.விக்னேஷ், பகுதிச் செயலாளர் மகேஷ்வரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கல்கி, இப்ராஹிம், ஸ்வேதா உள்ளிட்டோர் பேசினர்.

பல்லாவரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பகுதித் தலைவர் ஹேமக்குமார்,தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், செயலாளர் தீ.சந்துரு, பகுதிச் செயலாளர் சக்திவேல், இணை செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் பேசினர்.