முந்தய பக்கம்

தமிழ் முற்றம் அமைப்பு துவக்க விழா

1 Mar 2026, 5:56 pm
  தமிழ் முற்றம் அமைப்பு துவக்க விழா
<p><strong>&nbsp; தமிழ் முற்றம் அமைப்பு துவக்க விழா</strong></p> <p>கடலூர்,மார்ச்.1- &nbsp;தமிழ் முற்றம் அமைப்பு துவக்க விழா கம்மியம் பேட்டையில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. &nbsp;அமைப்பின் தலைவர் க.இளங்கோவன் தலைமை தாங்கினார். நகர் நல சங்க தலைவர் க.ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் சரவணன், இராம.சோமசுந்தரம், கவிமனோ, வெற்றிச்செல்வி சண்முகம் குறிஞ்சி ரவி, பி. முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலு பச்சையப்பன் வரவேற்புரையாற்றினார். கடலூர் சட்ட மன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், தமிழ் முற்றம் சிறப்பு தலைவர்கள் எம்.மருத வாணன், பி.வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி ஆகியோர் &nbsp;வாழ்த்துரை வழங்கினார். கலைமாமணி டாக்டர் கலக்கல் காங்கேயன், பெரியார் கலைக் கல்லூரி தமிழ் பேராசிரியர் ஜானகி ராசா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். உதவிச் செயலாளர் கலைச்செல்வி மனோகரன் நன்றி கூறினார். &nbsp;நிகழ்ச்சியில் கடலூர் நற்பவி ஜெயம் நாட்டியாலயாவின் சவுந்தர்யா விமல் மற்றும் ஜெயஸ்ரீ குமார் ஆகியோரின் பரதநாட்டியம், அனுநித்திஷ் மனோகரனின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழில் 100 &nbsp;மதிப்பெண்கள் எடுத்த ஓவியா, தேவதர்ஷினி பாராட்டப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் படத்தில் 100 மதிப்பெண் எடுக்கும் மாண வர்களுக்கு கௌரவிப்பது என்றும், &nbsp;கடலூர் முதல் சாவடி வரை உள்ள நெல்லிக்குப்பம் சாலைக்கு மறைமலை அடிகள் சாலை &nbsp;என்று பெயர் சூட்ட வேண்டும். கடலூரில் தமிழுக்கென தனி ஆவண காப்பகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட &nbsp;தீர்மானங்கள் &nbsp;நிறைவேற்றப்பட்டன.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram