தமிழிசை என்றாலே தனி ‘ராசி’ தான்!
4 Apr 2026, 4:02 pm
<p><strong>தமிழிசை என்றாலே தனி ‘ராசி’ தான்!</strong></p>
<p>மயிலாப்பூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக தமிழிசை சௌந்தரராஜன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழிசை என்றாலே ஒரு தனி ‘ராசி’ உண்டு. 2006 ராதாபுரம் தொடங்கி, 2024 தென் சென்னை வரை இவர் சந்தித்ததெல்லாம் ‘தொடர் தோல்விகளே’. 2006, 2009, 2011, 2016, 2019, 2024 எனத் தொடர்ச்சியாக ஆறு முறை மக்கள் இவரைத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆனாலும் விடாமுயற்சியுடன் மயிலாப்பூரில் ஏழாவது முறையாகக் குதித்துள்ளார். திரும்பத் திரும்பத் தோல்வியடைந்தாலும் இவருக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் வேறு எந்தத் தலைவருக்காவது கிடைக்குமா என்பது சந்தேகமே. 2026 மயிலாப்பூரிலும் மக்கள் இவருக்குப் ‘பழைய பாணியிலேயே’ விடைகொடுக்கத் தயாராகிவிட்டார்கள் போலிருக்கிறது!</p>
