முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு

24 May 2026, 12:03 am
புதிர் விளையாட்டு

புதிர் விளையாட்டு

பட்டுகளே, கதை வடிவப் புதிர்கள் உங்களுக்குப் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போது ஒரு மாறுபட்ட கதை உங்களுக்காக.

பட்டுகளே, கதை வடிவப் புதிர்கள் உங்களுக்குப் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இப்போது ஒரு மாறுபட்ட கதை உங்களுக்காக. எந்த வாசல்? சின்னப் பையன் எழிலன் மைதா னத்தில் வீட்டுக்கு வெளியே விளையா டிக்கொண்டிருந்தான். திடீரென்று அவனைக் காணவில்லை. எல்லோ ரும் பதற்றம் அடைந்தார்கள். அவ னைத் தேடினார்கள். சிறிது நேரத்தில் ஒரு தகவல் வந்தது. அவன் ஒரு அடர்ந்த காட்டின் நடுவே இருந்த பயங்கரமான கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்று அந்தத் தகவல் தெரிவித்தது. என்ன செய்வது என்று கவலைப்பட்டபோது, எழிலனின் உற்ற தோழி கவிதா அவனைக் காப்பாற்ற முன்வந்தாள். காட்டுக்குள் நுழைந்து கோட் டைக்கு முன்னால் வந்து நின்றாள் கவிதா. அதன் உள்ளே செல்ல மூன்று வாசல்கள் இருந்தன. ஒவ்வொரு வாச லிலும் ஒரு ஆபத்து காத்திருந்தது. முதலாவது வாசலின் கதவுக்குப் பின் னால் பெரிதாக நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. உள்ளே நுழைந் தால் சாம்பலாகிவிட வேண்டிய துதான். இரண்டாவது வாசலின் உள்ளே நவீன எந்திரத் துப்பாக்கி களுடன் நூறு அடியாட்கள் நின்று கொண்டிருந்தார்கள். பார்த்த உடனே சுட்டுவிடுவார்கள். மூன்றாவது வாசலுக்குள் பல மாதங்களாக உண வே வழங்கப்படாத ஒரு சிங்கம் பசி யோடு, யார் வந்தாலும் அடித்துச் சாப் பிடக் காத்திருந்தது. கோட்டைக்குள் செல்ல வேறு வழிகள் எதுவும் இல்லை. கவிதா சற்று சிந்தித்தாள். இருட் டறையில் விளக்குப் போட்டது போல மூளையில் ஒரு யோசனை உதித் தது. கொஞ்சமும் பயப்படாமல், மிகத் துணிச்சலாக ஒரு கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, எழிலனை வெற்றி கரமாக மீட்டு அழைத்து வந்தாள். கவிதா எந்த வாசல் கதவைத் தேர்ந்தெடுத்திருப்பாள்? ஏன்?

Share
FacebookXWhatsAppTelegram