தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புதிர் விளையாட்டு

30 May 2026, 10:56 pm
புதிர் விளையாட்டு

புதிர் விளையாட்டு

செல்லக் கிளிகளே, கூர்ந்து படித்தால் நீங்களே விடையைக் கண்டுபிடிக்க முடியும். அப்படிப்பட்ட புதிர்தான் இந்த வாரம் உங்களுக்கு.

தங்க நாணயம் எங்கே போனது?

ஒரு பெரிய தோட்டத்தில் பலாப்பழங்களை அறுவடை செய்யும் போட்டி நடத்தப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் பலாப்பழங்களைப் பறிக்கிறவர்களுக்குத் தங்க நாணயம் பரிசு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் போட்டியில் காரன் அதிகமான பழங்களைப் பறித்தான். தோட்டத் தலைவர் அவனுக்குத் தங்க நாணயத்தைப் பரிசாக வழங்கினார். கூடுதல் பரிசாக ஒரு முழு பலாப்பழத்தையும் கொடுத்தார். மறுநாள் காலையில் காரன் தோட்டத் தலைவரைச் சந்திக்க வந்தான். “அய்யா, நீங்கள் கொடுத்த தங்க நாணயத்தை நீங்கள் கொடுத்த பலாப்பழத்திற்குள் வைத்திருந்தேன். இன்று காலை யில் பார்த்தால் நாணயத்தைக் காணவில்லை,” என்று புகார் செய்தான். “உனக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கிறதா,” என்று தலைவர் கேட்டார். “ஆமாம் அய்யா. பக்கத்து வீட்டில் இருக்கிற கூரன் மேல்தான் எனக்குச் சந்தேகம். நேற்று அவனும் போட்டியில் கலந்து கொண்டான், ஆனால் அவனுக்குப் பரிசு கிடைக்கவில்லை. அதனால் என் மேல் கோபத்தோடு இருந்தான்,” என்று காரன் சொன்னான். “எதை வைத்து கூரன் மேல் சந்தேகப்படுகிறாய்,” என்று தலைவர் கேட்டார். “நீங்கள் கொடுத்த பலாப்பழத்தை வெட்டாமல் வைத்திருந் தேன். அதை அவன் பொறாமையோடு பார்த்துக்கொண்டே இருந்தான். ஆகவே அவன்தான் எடுத்திருப்பான்,” என்று காரன் கூறினான், சிறிது நேரம் யோசித்த தலைவர், “நீ பொய் சொல்கிறாய். தங்க நாணயத்தை யாரும் திருடவில்லை,” என்று அறிவித்தார். தலை குனிந்து நின்ற காரனை, உழைப்பால் பரிசு பெற்ற நீ, உண்மை யைப் பேசி முன்னேறு,” என்று அறிவுரை கூறி அனுப்பினார். தலைவரின் நண்பர், “காரன் பொய் சொல்கிறான் என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்,” என்று கேட்டார். தலைவர் சொன்ன விளக்கத்தைக் கேட்டு கைகுலுக்கிப் பாராட்டினார். தலைவர் சொன்ன விளக்கம் என்ன?

விடைகள்

“பலாப்பழத்தை வெட்டாமல் வைத்திருந்ததாகத்தான் காரன் சொன்னான். பழத்தை வெட்டாமல், அதற்குள் தங்க நாணயத்தை எப்படி ஒளித்து வைக்க முடியும்? ஆகவே அவன் சொல்வது பொய் என்று கண்டுபிடித்தேன்,” என்று தலைவர் விளக்கினார். சரியாக இதை ஊகித்த மான்களுக்கு பாலர் பூங்கா வாழ்த்துகள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.