திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
17 May 2026, 9:28 pm
<p><strong>திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை</strong> </p><p>சென்னை, மே 17- தமிழ்த் திரைப்பட உல கின் மூத்த தயாரிப்பாளரான கே.ராஜன் (வயது 85) சென்னையில் ஞாயிறன்று தற்கொலை செய்து கொண் டார். அடை யாறு ஆற்றுப் பகுதியில் இருந்து அவரது உடலை மீட்ட தீயணைப்புத் துறையினர், பிரேதப் பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள் ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரி கள்’ திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுக மான கே.ராஜன், பல திரைப் படங்களைத் தயாரித்தும் இயக்கியும் உள்ளார். கடந்த 2000-ஆம் ஆண்டில் சென்னை விநியோ கஸ்தர்கள் சங்கத்தின் தலை வராகப் பொறுப்பு வகித்த அவர், சமீப காலங்களாகத் தொலைக்காட்சி விவா தங்கள் மற்றும் ஊடகச் சந்திப்புகளில் தமிழ்த் திரைப்படத் துறை சார்ந்த பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது மறைவு திரை யுலகினர் மத்தியில் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.</p>
