முந்தய பக்கம்

தமிழ்த் தாத்தா உ.வே.சா. சிலைக்கு தமுஎகச மரியாதை

20 Feb 2026, 2:39 pm
தமிழ்த் தாத்தா உ.வே.சா. சிலைக்கு  தமுஎகச மரியாதை
<p><strong>தமிழ்த் தாத்தா உ.வே.சா. சிலைக்கு&nbsp; தமுஎகச மரியாதை</strong></p> <p>திருவாரூர், பிப்.20- &nbsp;திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கிளையின் சார்பாக தமிழ் தாத்தா உ.வே.சா. 171 ஆவது பிறந்தநாள் விழா, உத்தமதானபுரத்தில் உள்ள உவேசா நினைவு இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. &nbsp;நிகழ்வுக்கு கிளையின் தலைவர் சித்ரா தலைமை ஏற்றார். கிளைச் செயலாளர் சார்லஸ் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் கவிஞர் களப்பிரன் உ.வே.சா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து உரையாற்றினார். முன்னதாக வலங்கைமானில் இருந்து, நிகழ்ச்சிக்கு பறை இசையுடன் கலைப்பேரணியாகச் சென்று, நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. &nbsp;நிகழ்வில், திருவாரூர் மாவட்டத் தலைவர் மு. சௌந்தரராஜன், மாவட்டச் செயலாளர் முனைவர் ஜீ. வெங்கடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் பாலசுந்தரம் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் பேராசிரியர் ந. லெனின், மாநிலக்குழு உறுப்பினர் சத்தியநாதன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். கிளை பொருளாளர் &nbsp;சூர்யா நன்றி கூறினார். சிபிஎம் சார்பாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் உ.வே.சா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram