தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நூலாற்றுப் படை

4 Oct 2026, 9:08 pm
நூலாற்றுப்  படை

நூலாற்றுப் படை

திருக்குறளின் தனித்துவ மீட்டெடுப்பு! - எம்.ஜே.பிரபாகர்

எழுத்தாளரும் ஆய்வாள ருமான முனைவர் தேமொழி எழுதிய ‘குறளுக்கு உரிமை கோரல்’ என்னும்நூல்,திருக்குறளின் தனித்தன்மையை மீட்டெடுப்பது குறித்தும், அதன் மீது பல்வேறு தரப்பினரால் திணிக்கப்படும் மதச்சாயல்கள் மற்றும் குறுகிய ஆதிக்கக் குறுக்கீடுகளை எதிர்த்தும் விவாதிக்கும் மிக முக்கியமான திறனாய்வுநூலாகும்.

திருக்குறள் என்பது உலகப் பொதுமறை; அது எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கோ, சாதிக்கோ அல்லது இனத்திற்கோ மட்டுமானதல்ல என்ற உலகளாவிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பரிமேலழகர் போன்ற பிற்கால உரையாசிரியர்கள் திருக்குறளுக்குத் தங்கள் சொந்தச் சமயச் சார்பான நிறம்பூசியதையும், சமஸ்கிருத-வைதீகத் தாக்கங்கள் மூலம் வள்ளுவரின் கருத்துகளைக் குறிப்பிட்ட கட்டமைப்புக்குள்சுருக்க முயன்றதையும் இந்நூல்வன்மையாகக் கேள்விக்குள்ளா க்குகிறது.

தமிழர்களின் சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனை மரபிலிருந்து திருக்குறளை அணுகும் நூலாசிரியர், அதன் மதச்சார்பற்ற, அறம் சார்ந்த தூய முகத்தை வெளிக்கொணர்கிறார். 17 செறிவான கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் ‘காலந் தோறும் வள்ளுவர் வரலாறு’, ‘பெண்ணிய பார்வையில் கலைஞரின் உரை’, ‘பள்ளிப் பாடங்களில் திருக்குறள்’, ‘குறளுக்கு உரிமை கோரல்’ உள்ளிட்ட கட்டுரைகள் இடம்பெற் றுள்ளன. இந்நூலுக்கு எழுத்தா ளர் நா. முத்துநிலவன் சிறந்த அணிந்துரை வழங்கிசிறப்பித்துள்ளார்.

இன்றைய சூழலில் திருக்குறளைச் சில குறிப்பிட்ட அரசியல் மற்றும் மத அடை யாளங்களுக்குள் அடைக்க முய லும் போக்குகளுக்கு வீரியமிக்க எதிர்வினையாக இந்நூல் விளங்குகிறது. திருக்குறளை அதன் தூய வடிவில், சமயச் சார்பின்றி அணுக விரும்பும் அனைவரும் வாசிக்க வேண்டிய இச்சிந்தனைச் சிற்பக் கருவூலம், பள்ளி மற்றும்கல்லூரிநூலகங்களில் தவறாமல் இடம்பெற வேண் டிய அத்தி யாவசியமான படைப் பாகும்.

குறளுக்கு உரிமை கோரல் ஆசிரியர் முனைவர் தேமொழிவெளியீடு: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்புவிலை: ₹180/-மின்னஞ்சல்: mythforg@gmail.com

செயற்கை நுண்ணறிவு நவீன தொழில்நுட்பத்தின் வரலாறும் எதிர்காலமும்! - எஸ். பாலா

அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவரும் செயற்கை நுண்ணறிவின் (AI) வரலாற்றை அறிந்துகொள்வது நமது கால கட்டத்தின் அவசிய தேவையாகும். 1837-ல் சார்லஸ் பாபேஜால் வடிவமைப்பு பெற்ற முதல் இயந்திரக் கணினி (பகுப்பாய்வு இயந்திரம்) தொடங்கி இன்றைய ஜெனரேடிவ் ஏஐ வரை, தொழில் நுட்பத்தின் ஆண்டுவாரியான வரலாற்றுப் பரிணாமத்தை அறிவியல் பூர்வமாகப் பதிவு செய்கிறது டோபி வால்ஷ் எழுதிய ‘செயற்கை நுண்ணறிவு: சுருக்கமான வரலாறு’ என்னும் நூல்.

“மனிதன் ஒரு கருவி செய்யும் விலங்கு” என்ற பெஞ்சமின் பிராங்க்ளின் கூற்றிற்கேற்ப, தன் உழைப்பை எளிதாக்கப் புதிய கருவிகளைத் தொடர்ந்து உருவாக்குவது மனித இயல்பாக உள்ளது. முதலாளித்துவ உற்பத்தி முறையில் உபரி மதிப்பை உயர்த்தவும் லாபத்தைப் பெருக்கவும் இயந்திரமயமாக்கலும் கணினிமயமாக்கலும் வந்ததைத் தொடர்ந்து, இன்று தரவுகள் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவும், மனிதருக்குப் பதிலாகச் செயல்படும் முகவர் ஏஐ (Agentic AI) முறைகளும் முன்னுக்கு வந்துள்ளன.

“மனிதரின் சிந்தனையைக் கணக்கீடாக மாற்றலாம்” என்ற தத்துவஞானி ஹாப்ஸின் கருத்திலிருந்து துவங்கி, கோடிக்கணக்கான தரவுகளைச் சேகரித்துத் திட்டமிட்டுச் செயல்படும் ஆற்றலை ஏஐ பெற்றுள்ளது. மனித மூளையின் நியூரான்கள் வலையமைப்பைப் போல அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் (Transformer) வடிவமைப்பே இதன் அபார வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.

அதேநேரத்தில், ஏஐ தொழில் நுட்பத்தை ஏகபோகமாக்கும் முயற்சிகளையும், ஏஐயால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டி, “இதன் அதிகாரம் யாரிடம் உள்ளது? யாருக்கு லாபம்?” என்ற சமூகப் பொருளாதாரக் கேள்வியையும் இந்நூல் ஆழமாக முன்வைக்கிறது.

கடினமான அறிவியல் கருத்துகளையும் ஆழமான தொழில்நுட்பச் செய்திகளையும் எளிமையான தமிழ் நடையில் இஸ்ரோ அறிவியலாளர் பெ. சசிக்குமார் மற்றும் எம். ஜோதிமணி தம்பதியினர் மிகச் சரளமாக மொழியாக்கம் செய்துள்ளனர். நவீன அறிவியல் உலகைப் புரிந்துகொள்ள விரும்புவோர் அனைவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய முக்கியமான ஆவண நூலாகும்.

செயற்கை நுண்ணறிவு சுருக்கமான வரலாறுஆசிரியர்: டோபி வால்ஷ்தமிழில்: எம். ஜோதிமணி, பெ. சசிக்குமார்பக்கங்கள்: 222 | விலை: ₹299/-

செயற்கை நுண்ணறிவால் உங்கள் சிந்தனையை மேம்படுத்துங்கள்!

நவீன தொழில் நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு நமது அன் றாட வாழ்க்கையிலும் அலுவலகப் பணிகளி லும் தாக்கத்தை ஏற்படுத்து கிறது என்பதை எளிய முறையில் ஆங்கிலத்தில் விளக்கும் ஒரு பயனுள்ள வழிகாட்டி நூல்தான் தினேஷ் மனோகரன் எழுதிய “Upgrade Your Brain With AI”.

இன்றைய காலகட்டத்தில் ChatGPT, Gemini, Claude, NotebookLM, Grok போன்ற பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகள் மனிதர்களின் அன்றாட வேலைகளை எவ்வாறெல்லாம் எளிதாக்குகின்றன என்பதையும், இத்தகைய நவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து பணியாற்றத் தவறுபவர்கள் சமூகப் போட்டிச் சூழலில் எப்படிப் பின்தங்கிப் போகிறார்கள் என்பதையும் 18 விரிவான அத்தியாயங்களில் இந்நூல் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் என அனைத்துத் தரப்பினரும் ஏஐ தொழில்நுட்பத்தை எப்படிக் கையாள்வது என்பதை நிஜ வாழ்க்கை உதாரணங்கள் மூலம் நூலாசிரியர் கற்றுத் தருகிறார். இரவு நேரப் பணிபுரியும் சிஸ்டம் அட்மின், சைபர் அனலிஸ்ட், தேர்விற்குத் தயாராகும் மாணவர் மற்றும் கடினமான மின்னஞ்சல்களை எழுதும் மேலாளர் போன்றோரின் அனுபவங்கள் இதில் நடைமுறைச் சான்றுகளாக விவரிக்கப்பட்டுள்ளன.

வாசகர்கள் உடனடியாகப் பயன்படுத்து வதற்கு ஏதுவாக 40-க்கும் மேற்பட்ட தயார்நிலை ப்ராம்ப்ட்கள் (Prompts) வழங்கப்பட்டிருப்பது இதன் மிகப்பெரிய பலமாகும். ஏஐ தொழில்நுட்பத்தைப் பற்றிப் புதிதாகக் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு சிறந்த தொடக்கப்புள்ளியாக (Beginner-friendly) அமையும் இந்நூல், செயற்கை நுண்ணறிவுடன் தன் திறமையை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான வழிகாட்டியாகும்.

Upgrade Your Brain With AI (Real Scenarios Real Prompts Real Results)ஆசிரியர்: தினேஷ் மனோகரன்வெளியீடு: Notion Press (notionpress.com)விலை: ₹699/-மின்னஞ்சல்: tamilcybervoyage@gmail.com

நூறு ஆண்டுகளுக்கு மேல் வளர்ச்சி பெற்ற சிறுகதை இலக்கிய வரலாறு!

முனைவர் இரா. சாவித்திரி எழுதிய ‘தமிழ்ச்சிறுகதை களில் திறனாய்வு’ என்னும் நூல், தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் சிறுகதைத் துறையின் ஆய்வுக் கண் ணோட்டத்தையும் திற னாய்வு முறைகளையும் ஆழமாகப் பதிவு செய்யும் ஒரு முக்கியமான வழிகாட்டியாகும். 2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளிவந்துள்ள சிறுகதைகளை மையப்படுத்தி, ஆறு விரிவான அத்தியாயங்களில் தனதுசெறிவான ஆய்வுப் பார்வையை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, வடிவமைப்பு உத்திகள், மொழிநடை மற்றும்படைப்புகளுக்கும் திறனாய்வுக்குமான பிணைப்பு குறித்து இந்நூல் விரிவாக ஆராய்கிறது. சிறுகதைகளை வெறும் கதை சொல்லும் வடிவமாக மட்டும் அணுகாமல், சமூக மாற்றத்தின் ஆவணமாகவும் உள வியல் வெளிப்பாடாகவும் பார்க்கும்நெறிமுறைகளை நூலாசிரியர் பின்பற்றுகிறார். மரபுசார் வடிவத்திலிருந்து நவீனத்துவ, பின்நவீனத்துவக்காலகட்டங்கள் வரை கதையாடலில் ஏற்பட்ட கருப்பொருள் மாற்றங்கள் ஏராளமான சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன.

சமூகம், அரசியல், விளிம்புநிலை மக்களின் வாழ்வியல், பெண்ணியம் சார்ந்த பார்வைகள் மற்றும் உளவியல் சிக்கல்கள் போன்ற பன்முகப் பரிமாணங்களைச் சிறுகதைகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பதை ஆசிரியர் அலசுகிறார். குறிப்பாக, அண்மைக் காலத்தில் அறிமுகம் குறைவாக உள்ள, வெளிச்சத்திற்கு வராத பல புதிய பெண் படைப்பாளிகளின் பங்களிப்பையும் அவர்களது படைப்புகளையும் இந்நூல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.இலக்கியத்தைச் சரியான கோட்பாடுகளோடு அணுகுவதற்கான திறனாய்வுக் கருவிகளை வழங்கி, கதைகளின் ஆழ அகலங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகக் கற்றுத் தருகிறது. தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர்களுக்கும், சிறுகதை வாசிப்பில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் ஒரு சிறந்த திறவுகோலாக விளங்கும் இந்நூல், தமிழ்ச் சிறுகதைத் திறனாய்வுப் பரப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

தமிழ்ச்சிறுகதைகளில் திறனாய்வுஆசிரியர்: முனைவர் இரா. சாவித்திரவெளியீடு: இந்தியன் யூனிவர்சிட்டி பிரஸ், சென்னை-600018விலை: ₹320/-தொடர்புக்கு: 9444567935

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.