தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

3 hours before
சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
<p><strong>சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு</strong></p><p>திருப்பூர், அக்.4-தமுஎகச சார்பில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் ஞாயிறன்று நடைபெற்ற கல்லூரி மாணவர்கள் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவிற்கு, பொங்கலூர் தலைவர் செ.சங்கீதா தலைமை ஏற்றார். செயலாளர் ப.கனகராஜா வரவேற்றார். ‘அதீத தொழில்நுட்ப வளர்ச்சியும் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களும்’ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. அர்ச்சுனன் நிஷா சரண்யா தனலட்சுமி துரைமுருகன் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். ‘புத்தகங்கள் சமூகத்தின் சொத்து’ என்ற தலைப்பில் ஞானாலயம் நிறுவனர் இ.சரவணமூர்த்தி உரையாற்றினார். ‘சமூகத்தை பிரதிபலித்த சிறுகதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மா.நாட்ராயன் பேசினார். ‘பண்பாடும் படும் பாடும்’ என்ற தலைப்பில் தமுஎகச மாநில துணைத்தலைவர் ஆதவன் தீட்சண்யா சிறப்புரையாற்றினார். இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கான சிறுகதை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.</p><p>டெர்ஃப் அகாடமி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீ சஞ்சய், வித்யா பாரதி, ரம்யா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். ஸ்ரீநிதி, சேம் கங்கன் ஆறுதல் பரிசு பெற்றனர். ஏஜி கலை அறிவியல் கல்லூரியை சேர்ந்த காவிய தர்ஷினி, வித்யா ஹரிணி, கிருஷ்ண பிரகாஷ் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். ஹரிஹரன் சைமன் தாமஸ் ஆறுதல் பரிசு பெற்றனர். ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியை சேர்ந்த செல்வநாயகி, அனு ஷாலினி, கவி ஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். ஜனதர்ஷினி, தர்ஷினி ஆகியோர் ஆறுதல் பரிசுகள் பெற்றனர். இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள், பொங்கலூர் வட்டாரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில், பொங்கலூர் கிளைப் பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.