தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதி மேம்பாடு! - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே

5 hours before
தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதி மேம்பாடு! - சு.வெங்கடேசன் எம்.பி-யின் கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே

தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், பயணிகளின் சிரமத்தைக் குறைக்கவும் கூடுதலாக புதிய 13 மின்தூக்கிகள், 10 புதிய நகரும் படிக்கட்டுகள் (Escalators) உள்ளிட்ட வசதிகளை அமைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தென் மாவட்டப் பயணிகளின் பயன்பாட்டிற்கு மிக முக்கியமான ரயில் நிலையமான தாம்பரம் ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வசதிகளைச் செய்து தரக் கோரியும் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

முக்கிய அம்சங்கள்:

மின்தூக்கிகள் (Lifts) மற்றும் நகரும் படிக்கட்டுகள் (Escalators): தாம்பரம் நிலையத்தில் ஏற்கனவே 6 நகரும் படிக்கட்டுகள் மற்றும் ஒரு மின்தூக்கி செயல்பாட்டில் உள்ளன. கூடுதலாக, பழைய நடைமேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் 4 மின்தூக்கிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை மார்ச் 2027-க்குள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன நடைமேம்பாலம்: நிலையத்தின் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில், புதிய நடைமேம்பாலத்தில் 9 மின்தூக்கிகள் மற்றும் 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

மேம்படுத்தப்பட்ட அணுகுமுறை பாதைகள்: கிழக்கு நுழைவு வாயிலில் புதிய நடைமேம்பாலத்தை இணைக்கும் வகையில் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் போதுமான மின்விளக்கு வசதிகள் மற்றும் பேருந்து நிலையம் வரை செல்லும் பிரத்யேக நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. இப்பணிகள் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும்.

மேற்கு நுழைவு வாயில் மேம்பாடு: ஜி.எஸ்.டி (GST) சாலை வழியாகச் செல்லும் பயணிகளுக்காக, தடையற்ற போக்குவரத்து மற்றும் வசதியான வாகன இறக்கம் (Drop-off) கொண்ட புதிய நுழைவாயில் மற்றும் வாகன நிறுத்துமிடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பழைய நிலையக் கட்டிடத்தையும் புதிய நடைமேம்பாலத்தையும் இணைக்கும் வகையில் நடைபாதை அமைப்பதற்கும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்கள் (Battery Operated Cars): தற்போது நடைமேடை 5 முதல் 10 வரை பயணிகளின் வசதிக்காக மூன்று மின்சார வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பயணிகளின் வசதிக்காகவும், நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் இத்தகைய நடவடிக்கைகள், திட்டமிட்ட காலத்திற்குள் முடிவடைய வேண்டும் என்றும், காலதாமதம் பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.