தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக 13 மின்தூக்கிகள், 10 நகரும் படிக்கட்டுகள்! சு.வெங்கடேசன் எம்.பி.க்கு தெற்கு ரயில்வே கடிதம்

12 Jul 2026, 11:58 pm
தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக 13 மின்தூக்கிகள், 10 நகரும் படிக்கட்டுகள்! சு.வெங்கடேசன் எம்.பி.க்கு தெற்கு ரயில்வே கடிதம்
<p><strong>தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக 13 மின்தூக்கிகள், 10 நகரும் படிக்கட்டுகள்! சு.வெங்கடேசன் எம்.பி.க்கு தெற்கு ரயில்வே கடிதம் </strong></p><p>மதுரை, ஜூலை 12- தென் மாவட்டப் பய ணிகளின் மிக முக்கிய மான போக்குவரத்து மையமாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலை யத்தில் உள்கட்ட மைப்பை மேம்படுத்த வும், கூடுதல் வசதி களை ஏற்படுத்திக் கொடுக்கவும் தெற்கு ரயில்வேக்கு, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்க டேசன் கடிதம் எழுதியிருந்தார். இதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து, சு.வெங்கடேசன் எம்.பி.க்கு, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங், விரிவான விளக்கத்தைப் பகிர்ந்துள் ளார். மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் தற்போது தாம்பரம் நிலையத்தில் ஏற்க னவே 6 நகரும் படிக்கட்டுகளும், ஒரு மின் தூக்கியும் பயணிகளின் பயன்பாட்டில் உள்ள நிலையில், இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பழைய நடை மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் கூடுதலாக 4 புதிய மின்தூக்கிகள் அமைக் கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரு கின்றன. இவை 2027 மார்ச் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, நிலை யத்தின் அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய நடைமேம்பாலத்தில், பயணி களின் வசதிக்காக 9 மின்தூக்கிகள் மற்றும் 10 நகரும் படிக்கட்டுகள் என அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. கிழக்கு நுழைவாயிலில் பிரத்யேக நடைபாதை நிலையத்தின் அணுகுமுறை வசதி களை மேம்படுத்தும் விதமாக, கிழக்கு நுழைவு வாயிலில் புதிய நடைமேம் பாலத்தை இணைக்கும் வகையில் பிரத் யேக நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் போதுமான மின்விளக்கு வசதிகளும், பேருந்து நிலை யம் வரை பயணிகளுக்கு இடையூறின்றிச் செல்லும் வகையிலான வசதிகளும் செய் யப்படுகின்றன. இப்பணிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும். அதேபோல், மேற்கு நுழைவு வாயிலில் ஜி.எஸ்.டி சாலை வழியாக வரும் பயணி களுக்காக, தடையற்ற போக்குவரத்து மற் றும் வசதியான வாகன இறக்கம் கொண்ட புதிய நுழைவாயில் மற்றும் வாகன நிறுத்து மிடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பழைய நிலையக் கட்டடத்தை புதிய நடைமேம்பாலத்துடன் இணைக்கும் வசதியும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பணிகளை விரைந்து முடித்திடுக! தற்போது நடைமேடை 5 முதல் 10 வரை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி களின் வசதிக்காக மூன்று மின்சார வாக னங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்று ரயில்வே பொதுமேலாளர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பயணிகளின் வசதிக்கா கவும், நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் இத்தகைய நடவடிக்கை கள், திட்டமிட்ட காலத்திற்குள் முடி வடைய வேண்டும் என்றும், காலதாமதம் பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற் படுத்தும் என்பதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.